கிழக்கு கடலோர பகுதிகளில் மேற்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக தென் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பரவலான மலைப்பொழிவு இருந்து வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மார்ச் 11ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 11-ம் தேதி தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு என்ன?

அதை மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு.. ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!