கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஆனால் தமிழகத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக வெப்பநிலை உயர்ந்து வாடி வதக்கி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டு செல்சியஸை டிகிரி வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் கோடை வெயில்.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு..!
இதர தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவு கூடும். மேலும் இந்த நிலை வருகின்ற 31ஆம் தேதி வரை நீடிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் ஒன்று, இரண்டு ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓர் இனங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் அதிகபட்ச வெப்பநிலை 34 இல் இருந்து 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை!