2026 தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவரை மாற்ற பா.ஜ.க. தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பதவியை பிடிக்கும் கோதாவில் இருவர் முன்னணியில் இருந்தாலும் தமிழிசை சவுந்தரராஜன் பலமாக முட்டி மோதி வருகிறார். அந்த இருவரில் ஒருவர் நயினார் நாகேந்திரன். அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர். சமீபத்தில் கூட எஸ்.பி.வேலுமணியுடனான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல், கோவை தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாவசனும் அ.தி.மு.க.வுக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் நெருக்கமாக இருப்பவர். இவர்கள் இருவரில் ஒருவரை தலைவராக நியமித்தால் கூட்டணியில் சிக்கல் வராது. பா.ஜ.க. ஆட்சியில் கூட இடம் பிடிக்கலாம் என ‘மேலிடம்’ கணக்குப் போட்டு வருகிறதாம்.
அதே நேரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பக்கம் மாநில தலைவராக முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்காக டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திப்பது? போராட்டங்களில் கலந்து கொள்வது, செய்தியாளர்களை சந்திப்பது என களத்தில் புகுந்து விளையாடி வருகிறார். பாஜகவில் இருக்கும் பெண் நிர்வாகிகளை படைதிரட்டுகிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ..பாஜக தமிழிசை கடும் தாக்கு

அப்படித்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்து விட்டு வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘யார் அந்த சார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்? என ஆக்ரோஷமாக கேள்விக்கணைகளைத் தொடுத்தார். அப்போது பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகள் படை அவர் பின்னால் இருந்தது அக்கட்சியில் புதிய திருப்பம்தான். முன்பெல்லாம் பாஜகவில் தமிழிசை, வானதி தவிர யாரும் பிரபலமாக இருக்க மாட்டார்கள்.
நடிகை கௌதமி இருந்தார். ஆனால் அவ்வளவாக பத்திரிகைகளில் தலை காட்ட மாட்டார். ஆனால் தற்போது அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்த பிறகு முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டியளித்தார். அந்தப் படத்தை பார்த்தால் தெரியும் பெண் தலைவர்கள் கூடி ஆச்சர்யமளித்தனர்.
குறிப்பாக தமிழிசையின் பின்னால் நடிகை குஷ்பூ, நடிகை ராதிகா, வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, தூத்துக்குடி முன்னாள் மேயர் சசிகலா புஷ்பா, விலுவங்கோடு முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, சிறுபான்மை பிரிவு டாக்டர் டெய்சி, முன்னாள் மகளிர் அணி தலைவி மகாலட்சுமி, தற்போதைய மகளிர் அணி தலைவி நாகர்கோயில் மீனாதேவி உள்ளிட்ட பலரும் குழுமி இருந்தனர்.
தமிழிசையின் தற்போதைய மூவ்களை உன்னிப்பாக கவனித்து வரும் அண்ணாமலை ஆதரவாளர் இந்த சம்பவத்தை வைத்து எதிர்வினையாற்றி வருகிறார்கள். ‘‘மூன்று மாதம் அண்ணாமலை இங்கு இல்லை. அப்போது தமிழிசை மக்கள் பிரச்சனையை பேசவில்லை. இப்போது பெண்களை எல்லாம் அணி சேர்க்கிறார் தமிழிசை.

அண்ணாமலை வந்து பேசினால் இவர்களுக்கு வருகிறது டென்ஷன் வருகிறது அவருக்கு எதிராகவும் இது திமுகவிற்கு சாதகமாக தமிழிசை நடப்பது போல் தெரிகிறது. என்ன தான் பெண்கள் படையை சேர்த்தாலும் அண்ணாமலையை ஒன்றும் செய்ய இயலாது.
வானதி, பொன் ராதகிருஷ்ணன், போன்றவர்களேல்லாம் மாநில தலைவராக வேண்டும் என்று டெல்லி வரை சென்று வந்தார்கள்.ஆனால் அவர்களுக்கு வேறு முக்கியமான பதவி தரப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளாக
தமிழிசை சவுந்தரராஜன் அந்தமான் நிக்கோபார் தீவு செல்கிறார். வானதி சீனிவாசன் மிசோரம் மாநிலம் செல்கிறார். பொன் ராதாகிருஷ்ணன்
லட்சத் தீவு செல்கிறார். ஆகையால் அண்ணாமலை தான் எப்போதும் தலைவர்’’ என்கிறார்கள் அவது ஆதரவாளர்கள்.
இதையும் படிங்க: அண்ணாமலை மனைவி பெயரில் ரூ.70 கோடி சொத்து..! பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் வெளியிட்ட டாக்குமெண்ட்... பின்னணி என்ன?