சிங்கப்பூரில் இந்திய வம்சவாளியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான பிரிதம் சிங் நாடாளுமன்ற குழுவிடம் பொய் கூறியதற்காக ₹9 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந் எதிர்க்கட்சி தலைவர் பிரிதம் சிங். இவர் நாடாளுமன்றக் குழுவிடம் சத்யபிரமாணம் செய்து பொய் கூறியதாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கில் எம்பி பிரீதம் சிங் குற்றவாளி என்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து இரண்டு வழக்குகளிலும் தலா ரூ.450ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்க பொறுமையைச் சோதிக்காதீங்க.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருமாவளவன் எச்சரிக்கை.!
சிங்கப்பூர் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு எம்பி குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது குறைந்தபட்சம் 10000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதால் அவர் தனது பதவியை இழப்பார் மற்றும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையில் திமுகவின் பச்சை நாடகம்… புட்டுப்புட்டு வைத்த சீமான்..!