100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்
100 நாள் வேலை திட்டத்தை ஒழித்து கட்ட வேண்டும் என தொடர்ந்து சீமான் பேசி வரும் நிலையில் அவரது தாயார் 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது
100 நாள் வேலை திட்டத்தை ஒழித்து கட்ட வேண்டும் என தொடர்ந்து சீமான் பேசி வரும் நிலையில் அவரது தாயார் 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய சீமான் 100 நாள் வேலை திட்டம் என்ற பெயரில் பலரும் ஒன்று சேர்ந்து புரணி பேசும் இடமாக மாறி இருக்கிறது, பொருளாதாரத்தை வளர்க்க திட்டமிடாத அரசு சும்மா சோம்பி உட்கார்ந்து இருக்க பணம் கொடுக்கிறது என கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் . இந்த நிலையில் சீமானின் தாயார் தங்களது கிராமத்திற்கு 100 நாள் வேலை திட்டம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீமானின் தாயார் அன்னமாள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சந்தித்து தங்களுக்கு பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
சீமானின் தாயார் அன்னமாமாள் நாம் தமிழர் கட்சி கொடிக்கட்டி வந்த பொலிரோ வாகனத்தில் ஏறி சென்றார். மகன் ஒருபுறம் 100 நாள் வேலைவாய்ப்பு வேண்டாம் என மேடைக்கு மேடை பேசிவரும் நிலையில் தாய் வேலை கேட்டு நிற்பது அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி சேர்த்தாரா..? அண்ணாமலைக்கு பொருந்து ‘திமுக ஃபைல்ஸ்’ லாஜிக்..? உருட்டுக்காக உதை வாங்கும் திருச்சி சூர்யா..!
இதையும் படிங்க: இது அபசகுணமாச்சே... 5 அமைச்சர்களை காவு வாங்கிய அரசு பங்களா... குடியேற மறுக்கும் அழுகினி அமைச்சர்..!