பழங்குடி பெண்கள் தொழில் தொடங்க ரூ.2 கோடி கடன்.. நிர்மலா சீதாராமனின் அசத்தல் அறிவிப்பு..!
மத்திய நிதிநிலை அறிக்கை 2025: நிர்மலா சீதாராமனின் அசத்தல் அறிவிப்புகள்
2025-26ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதன்படி காப்பீட்டுத்துறையில் இதுவரை இருந்துவந்த நேரடி அந்நிய முதலீட்டுக்கான அனுமதி 74 சதவிதத்தில் இருந்து 100 சதவிதமாக உயர்த்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதேபோன்று ஸ்விகி, ஜொமோட்டோ, செப்டோ போன்ற ஆன்லைன் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பகுதிநேர பணியாளர்களுக்கு இலசர மருத்துவ காப்பீடு உருவாக்கப்படும் என்றும், ஒருகோடி சாலையோர பணியாளர்களுக்கு காப்பீடு ஏற்படுத்தித் தரப்படும் என்பதும் அறிவிப்புகளில் ஒன்றாகும்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பெண் தொழில்முனைவோர்களுக்கு 2 கோடி ரூபாய் வரை தொழில் தொடங்க கடன் உதவி தரப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 5 லட்சம் பெண்கள் பலன் பெறுவார்கள் என்பது திட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடுத்தர குடும்பங்களுக்கு நிம்மதி! ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரியில்லை
வேளாண்குடி மக்களுக்காக கிஷான் க்ரெடிட் கார்டுகளுக்கான வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு கிஷான் க்ரெட்டிட் கார்டு வழங்கப்படும்அ என அவர் கூறியுள்ளார். பருத்தி விளைச்சலுக்கு பட்ஜெட்டில் தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க சிறப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதிக மகசூலுலைத் தரும் 100 விதைகளை மீட்டுருவாக்கம் செய்யும் திட்டம் தேசிய திட்டமாக உருமாற்றப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். விவசாயத்துறையில் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்படும் என்றும் நிர்மலா குறிப்பிட்டுள்ளார். சுயஉதவிக்குழுக்களை மேம்படுத்தும் வகையில் கிராமின் க்ரெட்டி கார்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோல்பொருட்கள் உற்பத்தித் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை அளிக்கப்படும். பொம்மை உற்பத்தியில் இந்தியா தலைநகராக திகழ்கிறது. மூடப்பட்டுள்ள 3 பொம்மை தொழிற்சாலைகள் திறக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு..! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!