இந்த ஐடியா நமக்குத் தோணலயே... திமுக, அதிமுகவை திகைக்க வைத்த தவெக... விஜய் விடுத்த அழைப்பு...!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் கொள்கை தலைவர்களின் உறவினர்கள் பங்கேற்க அழைப்ப் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நாளை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சூழலில் கொள்கை தலைவர்களின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நாளை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதலை நடைபெற இருக்கிறது அதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிற்கு 120 கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இந்த விழாவை பொறுத்தவரைக்கும் அரங்கத்துக்குள்ள பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த 120 மாவட்டங்களையும் கணக்கு வைத்து பார்த்தால் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட 2500 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
3000 நபர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் ஆண்டு துவக்க விழா காலை 10:00 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரைக்கும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த விழாவை பொறுத்தவரைக்கும் சிறப்பு அம்சங்களாக விஜயினுடைய மேடை பேச்சும் சிறப்பு அழைப்பார்களும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜகவில் இருந்து திடீர் விலகல்... தவெகவில் இணைகிறாரா ரஞ்சனா நாச்சியார்?... அவரே சொன்ன தகவல்...!
விஜயினுடைய மேடை பேச்சை பொறுத்தவரைக்கும் அதிரடியாகவும் தொண்டர்களுடைய மத்தியில உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எனக்கூறப்படுகிறது, இரண்டாவதாக தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்கள் குறிப்பாக அக்கட்சியினுடைய ஐந்து கொள்கை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரைக்கும் பெரியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட ஐந்து கொள்கை தலைவர்கள் உள்ளனர். ஐந்து கொள்கை தலைவர்களுடைய உறவினர்களை கட்சியில் இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வகையில அழைப்பும் விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோர் வருவது உறுதி...நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்...கடுப்பில் இருவர்