மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை.. மாநகராட்சியின் அலட்சியத்தில் அரங்கேறியதாக குற்றச்சாட்டு!
சென்னையில் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூன்று வயது சிறுமி தவறி விழுந்த சம்பவமா பகுதியில் அதிசய ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் உதயன் மீனா தம்பதியினர். என்ன தம்பதி இனருக்கு மூன்று வயதில் பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில், இவர்கள் வசித்து வரும் துரைப்பாக்கம் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோரத்தில் மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
மேலும் தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி பாதுகாப்புக்கு தடுப்புகள் ஏதும் வைக்காமல் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
அவ்வப்போது மழை நீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீரும் சேர்ந்து தேங்கி நின்றுள்ளது. இந்த நிலையில் சிறுமி பிரதிக்ஷா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது சிறுமி பிரதிக்ஷா எதிர்பாராத விதமாக வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: இளைஞர்களை மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற போலீஸ்... பாஜக எம்எல்ஏ கண்டனம்..!
இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பள்ளத்தில் விழுந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து குழந்தை சிகிச்சை பெற்று வரும் நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி இருந்ததாலே என்றும், மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியப் போக்கினால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளதாக குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள், சாலையோரம் தோண்டப்பட்டுள்ள மழை நீர் வடிகாலை சுற்றி தடுப்புகள் அமைத்தனர். மேலும் பள்ளங்களில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீரை மின் மோட்டார் மூலம் அகற்றினர்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்கும்.. 9 மாநிலங்களுக்கு பாதிப்பு.. காங்கிரஸ் அடுக்கிய புள்ளிவிவரம்..!