×
 

அலங்கார ஊர்திகளின் வண்ணமிகு அணிவகுப்புடன், 76 வது குடியரசு தின விழா: டெல்லியில், ஜனாதிபதி திரௌபதி தேசியக் கொடி ஏற்றினார்

இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் குதூகலமாக கொண்டாடப்பட்டது.

தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைத்து, அலங்கார ஊர்களின் வண்ணமிகு பவனி உடன் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த இந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட அவர், நாட்டின் கலாச்சாரத்தில் பாரம்பரிய மற்றும் அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளின் ஊர்வலத்தையும் பார்வையிட்டார். 

இதையும் படிங்க: நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலம்: 'பாதுகாப்பு கோட்டை'யாக மாறிய தலைநகர் டெல்லி; 2500 சிசிடிவி, 70 ஆயிரம் வீரர்கள் குவிப்பு

முன்னதாக கொடியேற்றுவதற்காக வந்த ஜனாதிபதி முர்முவை பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன் டேவையும் அவர்கள் வரவேற்றனர். 

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். 21 குண்டுகள் முழங்க மூவர்ண கொடியை ஜனாதிபதி ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அப்போது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர் தூவியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

இதை அடுத்து ராணுவ அணி வகுப்பு நடைபெற்றது. முப்படைவீரர்கள் பல்வேறு குழுக்களாக  சென்று ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நமது நாட்டின் ராணுவ வலிமையை பரிசற்றும் விதத்தில் ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு நடைபெற்றது. நவீன ரக போர் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் பவள விழா நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் இன் இன்றைய விழா சிறப்பிடம் பெற்றுள்ளது. 

இதையொட்டி தங்க பாரதம் ( சுவர்ணிம் பாரதம்) விராசத் அவுர் விகாஸ் (பாரம்பரியமும் மேம்பாடும்) என்கிற கருப்பொருளை விளக்கும் வகையில் மாநிலங்களின் 16 அலங்கார ஊர்திகளுடன் மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் 15 அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து சென்று பார்வையாளர்களின் பாராட்டை பெற்றன.

முன்னதாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு தேசிய போர் வீரர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 அவருடன் ராணுவ அமைச்சர் ராஜினாமா சிங்கம் கலந்து கொண்டார். அதன் மேல் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியா- சீனாவிற்கு இடையே நட்பு ஏற்படுமா..? வெளியுறவு செயலாளர் பெய்ஜிங் பயணம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share