மூளைச்சாவு அடைந்த 2 வயது குழந்தை... உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த பெற்றோர்!!
ஒடிசாவில் மூளைச்சாவு அடந்த 2 வயது குழந்தையின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் மூளைச்சாவு அடந்த 2 வயது குழந்தையின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்ணில் மட்கும் உடலை தானமாக கொடுத்தால் இறந்தாலும் பிறரின் உடல்நலன் மூலம் வாழலாம். தமிழ்நாடு உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலித்தில் உள்ளது. விபத்து ஏற்பட்டு மூளைச்சாவில் இறந்தாலோ, அல்லது மூளைச்சாவு ஏற்பட்டாலோ உடலுப்புகள் தானமாக பெறப்படுகின்றன.
அந்த வகையில் ஒடிசாவில் இரண்டு வயது குழந்தை உடலுறுப்பு தானம் செய்துள்ளது. புவனேஸ்வர் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையான ஜன்மேஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் உடல்நலம் பெறாத அந்த குழந்தை மார்ச் 1ம் தேதி மூளைச்சாவு அடைந்தது. இதை கேட்ட பெற்றோர் கதறி துடித்தனர். 2வயது குழந்தைக்கு மூளைச்சாவா என அதிர்ச்சியாகினர்.
இதையும் படிங்க: மூடநம்பிக்கையால் வந்த விபரீதம்.. பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த குடும்பம்..!
இந்த நிலையில், குழந்தையின் உடலுறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்துள்ளனர். மிகுந்த மன வலியுடனும், வருத்தத்துடனும், இறக்கத்துடனும் உடலுறுப்பு தானம் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு குழந்தையின் கல்லீரல் உள்ளிட்ட உடலுறுப்புகளை அகற்றினர்.
அந்த கல்லீரல் வேறொரு குழந்தைக்கு பொறுத்தப்பட்டது. குழந்தையின் சிறுநீரகங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு அனுப்பட்டது. இதன் மூலம் இறந்த குழந்தை இரண்டு பேருக்கு உயிர் கொடுத்துள்ளார். இருந்த குழந்தையின் உடலுறுப்பு தானம் கேட்போரை கண்கலங்க செய்துள்ளது.
இதையும் படிங்க: UNO-வில் எதிரொலித்த மணிப்பூர், காஷ்மீர் விவகாரம்.. ஆதாரமற்றது என இந்தியா பதிலடி..!