ரீல்ஸ் வெறி தலைக்கேறிய சப்- இன்ஸ்பெக்டர்..! அதிரடியாக வெளியே தூக்கி அடித்த மாவட்ட எஸ்.பி!!
பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியில் இருந்த போது சீருடையில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் செய்த சம்பவத்தால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியில் இருந்த போது சீருடையில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் செய்த சம்பவத்தால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில், பணியில் இருந்தபோது இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கியதற்காக லேடி சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா குப்தாவை, அந்த மாவட்ட எஸ்பி ஸ்வரன் இடைநீக்கம் செய்தார்.
பஹார்பூர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட பிரியங்கா குப்தா, தனது போலீஸ் சீருடையில் சமூக ஊடக வீடியோக்களை அடிக்கடி உருவாக்கி பகிர்ந்து கொண்டிருந்தார், இது விரைவில் வைரலானது.
இதையும் படிங்க: இளையராஜா செய்த தரமான சம்பவம்... வீடு தேடி வந்த ஸ்டாலின்!!
இதனால் இன்ஸ்பெக்டர் பிரியங்கா குப்தாவின் ரிலீஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து அது ரீல்ஸ் வெறியாகி போனது. இது தொடர்பாக அந்த மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அறிக்கைகளின்படி, பிரியங்கா குப்தா தனது போலீஸ் வாகனத்திற்குள் மட்டுமல்லாமல், ஒரு பொதுவுடைமை வங்கிக்குள்ளும் ரீல்களைப் பதிவு செய்து instagramல் பதிவு செய்திருந்தார்.
பெரும்பாலும் பாலிவுட் பாடல்களை பின்னணி இசையாகப் பயன்படுத்தி உள்ளார் இன்ஸ்பெக்டர் பிரியங்கா குப்தா.
வைரல் வீடியோக்களில் ஒன்றில் அவர் சீருடையில் ஒரு காருக்குள் அமர்ந்திருப்பதும், அவரது தொப்பி அவருக்கு அருகில் இருப்பதும், மற்றொரு வீடியோவில் அவர் "ஜிந்தகி இத்னா தோ சிகா ரஹி ஹை கி தோஸ்தி சப்சே ரகோ, லேகின் உம்மீத் கிசி சே நஹி" (வாழ்க்கை எனக்கு அனைவருடனும் நட்பாக இருக்க கற்றுக்கொடுக்கிறது, ஆனால் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை) என்ற பிரபலமான உரையாடலுக்கு உதட்டசைப்பதும் காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்று வைரலானதால் எஸ்பி ஸ்வர்ண் பிரபாத் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். ஆதாரங்களின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரியங்கா குப்தாவை மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்தார்.
இந்த சம்பவம் பீகார் காவல் துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, பணி நேரத்தில் சமூக ஊடக பயன்பாடு அதிகரித்து வரும் பிரச்சினையையும் இது எடுத்துக்காட்டுகிறது. ரீல்ஸ் எடுப்பது மொபைலில் டிபி வைப்பது உள்ளிட்டவை பொதுவானது என்றாலும், சட்ட அமலாக்க அதிகாரிகள் ஒழுக்கத்தையும் தொழில்முறையையும் பராமரிக்க வேண்டும்.
குறிப்பாக சீருடையில் பணியில் இருக்கும்போது, மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். என்பதை இன்ஸ்பெக்டர் சரண் பிரியங்கா குப்தாவின் இடைநீக்கம் சோசியல் மீடியாவில் அதிக நேரம் செயல்படும் காவல்துறையினருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது, சமூக ஊடக துஷ்பிரயோகம் பணியில் இருக்கும் போது பொறுத்துக்கொள்ளப்படாது என்பதை வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போலீசால் அச்சம் - அண்ணாமலை..!