×
 

இப்படியும் ஒருத்தரா... வாழ்நாள் முழுவதும் ரத்தத்தையே கொடுத்த மாமனிதன்!!

தனது வாழ்நாளில் 64 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வந்த ஒருவர் சுமார் 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.

தனது வாழ்நாளில் 64 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வந்த ஒருவர் சுமார் 2.4மில்லியன் குழந்தைகளை காப்பாற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்நெதவர் ஜேம்ஸ் ஹாரிசன். 81 வயதாகும் இவர் இன்று இறந்துள்ளார். இந்த முதியவர் உலகம் முழுவதும் சுமார் 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றினார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

கருவில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் ஆர் எச் டி பிரச்சனைக்கு இவர் தீர்வாக இருந்துள்ளார். கருவிலேயே குழந்தைகளை பாதிக்கும் ஆண்டி-டி எனும் பிளாஸ்மாவுக்கு டிமாண்ட் இருந்து வருகிறது. இந்த பிளாஸ்மா பலரில் ஒருவருக்கு மட்டுமே ரத்தத்தில் இருக்கும். அப்படிப்பட்ட நபர் தான் ஹாரிசன். இவருக்கு சிறுவயதில் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தங்க சுரங்கமே புதையலாக கிடைத்த அதிசயம்...எங்கே தெரியுமா?

அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹாரிசனுக்கு ரத்தம் ஏற்றபப்ட்டுள்ளது. அதை பார்த்த ஹாரிசன் தனக்கு முகமறியாத ஒருவர் ரத்த தானம் செய்ததை போல் தானும் ரத்த தானம் செய்ய நினைத்தார்.  ரத்தம் கொடுக்க சென்ற போது தனது உடலில் இருக்கும் அபூர்வத்தை தெரிந்து கொண்டார். 

கருவில் இருக்கும் குழந்தையை காக்கும் பிளாஸ்மா தனது ரத்தத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட இவர் 64 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வந்துள்ளார். இவரின் இந்த அளப்பரிய சேவையால் சுமார். 2.4 மில்லியன் குழந்தைகளின் உடல் தாயின் கருவிலேயே காக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹாரிசன் வயது மூப்பு காரணமாக இறந்துள்ளார். அவருகு உலகின் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இராணுவ விமானம் வெடித்து பயங்கர விபத்து..! 46 பேர் உயிரிழந்த சோகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share