பெற்ற மகனுக்கே எமனாக மாறிய தாய்...ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!
பெற்ற மகனை தலையணை வைத்து அமுக்கி கொலை செய்து விட்டு உடலை எரித்து வீசிய தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.
பெற்ற மகனை தலையணை வைத்து அமுக்கி கொலை செய்து விட்டு உடலை எரித்து வீசிய தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.
கிரிஷ்ணகிரியை சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னை பூந்தமல்லி அருகே கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜெயகாந்த் என்ற மகன் இருந்துள்ளார். ஆரம்பத்தில் குடும்ப வாழ்க்கை நன்றாக சென்றுள்ளது.
நாளடைவில் சரவணனுக்கும், மீனாட்சிக்கும் அடிக்கடி தகராரு ஏற்பட்டுள்ளது. இதனால் 2018ம் ஆண்டு கணவரை பிரிந்த மீனாட்சி மகனுடன் கரையான்சாவடியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: 6 வயது மகனை துடிக்க துடிக்க கொன்ற தாய்.. மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்.. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு..!
காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவரை பிரிந்து ஒரு குழந்தையுடன் வந்த மீனாட்சி மீது பெற்றோர் கோபத்தில் இருந்துள்ளனர். இதனால் மீனாட்சியிடம் தாய் வீட்டார் பேசுவதை தவிர்த்துள்ளனர். ஏற்கெனவே கணவருடன் பிரச்சனை, தாய் வீட்டாரும் பேசுவதில்லை என மன உளைச்சலுக்கு ஆளான மீனாட்சி விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த மீனாட்சி வீட்டில் யாரும் இல்லாதபோது தனது 6வயது மகனின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை எரித்து வீட்டின் அருகே இருக்கும் கால்வாயில் வீசியுள்ளார். இது தொடர்பான விசாரணையில் மீனாட்சி செய்த குற்றத்தை ஒப்பு கொண்டார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், தீர்ப்பு வழங்கினார். அப்போது தனது மகனை இரக்கமில்லாமல் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மீனாட்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
பெற்ற தாயே குழந்தைக்கு எமனாக மாறி கொலைச் செய்த கொடூர செயலால் பூந்தமல்லி பரபரப்பானது.
இதையும் படிங்க: "கலி முத்திருச்சு.." அம்மாவுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்.. ரூ.50 ஆயிரம் அபராதம்; மகனுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!