×
 

ஒரேயொரு விருந்து, ரூ.2000 கோடி வசூல்..

முதல்நாளிலேயே அதிரடி காட்டிய டோனல்ட் ட்ரம்ப்..

அமெரிக்க அதிபர்களாக பதவியேற்பவர்கள் முதல்நாளில் இரவு விருந்து அளிப்பது வழக்கம். அந்நாட்டின் முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அந்த விருந்தில் தவறாது பங்கேற்பார்கள். அமெரிக்க அதிபர், துணை அதிபர் ஆகியோருடன் ஒரே மேசையில் அமர்ந்து உலக அரசியல் தொடங்கி தொழில்துறை சார்ந்து பேசக்கூடிய வாய்ப்பினை யார் தான் தவற விடுவார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டோனல்ட் ட்ரம்ப், துணை அதிபராக பொறுப்பேற்ற ஜே.டி.வான்ஸ் ஆகியோர் நேற்று இரவு விருந்து அளித்தனர். இதில் பங்கேற்க கட்டணம் வசூலிக்கப்படுவதான் இதன் ஹைலைட். எப்படி நம்மூர் கோயில்களில் பொது தரிசனம், விஐபி தரிசனம் என வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுமோ அதுபோல 50 ஆயிரம் டாலரில் தொடங்கி ஒரு மில்லியன் டாலர் வரை 5 வகையான டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் வான்ஸ் ஆகிய இருவரையும் ஒன்றாக பார்த்து பேசி உண்டு மகிழ இரட்டிப்புக் கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்.. வாஷிங்டனில் கோலாகலம்!

 

ஒரு மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய். ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் போட்டிப் போட்டிக் கொண்டு டிக்கெட்டுக்களை வாங்கி உள்ளனர் உலக பிரபலங்கள். இதன்மூலம் வசூலான தொகை என்பது கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடி ரூபாயாம். இதுவரை அமெரிக்க அதிபர் கொடுத்த விருந்தில் அதிக வசூலான விருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

2017-ல் ட்ரம்ப் முதல்முறையாக பதவியேற்றபோது இதேபோன்றதொரு இரவு விருந்தின் மூலம் 106 மில்லியன் டாலர் வசூலித்தார். ஜோ பைடன் வைத்த விருந்தின் மூலம் 135 மில்லியன் டாலர் திரட்டினார். ஆனால் நேற்றைய விருந்தில் 267 மில்லியன் டாலர் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளாராம் ட்ரம்ப். வசூலாகும் இந்த தொகையை நாட்டின் நூலக மேம்பாட்டிற்கு நன்கொடையாக தந்து விடுவது அதிபர்களின் பழக்கம். அந்தவகையில் இந்த தொகையும் அவ்வாறே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எவ்வளவு பிரபலங்கள் இந்த விருந்தில் பங்கேற்கின்றனர் என்பதை பொறுத்தே அமெரிக்க அதிபர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, மரியாதை ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். அப்படி பார்க்கும்போது தனது சர்ச்சை பேச்சுக்களைத் தாண்டி உலக கோடீசுவரர்களின் வரவேற்பை ட்ரம்ப் பெற்றுள்ளார் என்பதே புலனாகிறது.

 

இதையும் படிங்க: டிக்டாக் தடை: 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஏன் தடை செய்தது தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share