பறிபோகிறது டெல்லி மேயர் பதவி.. ஆம் ஆத்மிக்கு அடுத்த அடி..!
டெல்லியில் வாங்கிய அடி ஆறுவதற்குள் பஞ்சாபில் 30-க்கும் மேற்பட்ட ஆன் ஆத்மி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பலத்த அடி வாங்கிய அசைக்க முடியாத ஆம் ஆத்மி கட்சி தற்போது ஆட்சியை இழந்திருக்கிறது. வெறும் 22 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்துக்குள் செல்லும் ஆம் ஆத்மி, இனி எதிர்க்கட்சியாக செயல்படும்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மணிஸ் சிசோடியா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தோற்றுப் போயினர்,இதனால் ஆம் ஆத்மி கூடாரமே கலகலத்து உள்ளது என்றே சொல்லலாம்.
டெல்லியில் வாங்கிய அடி ஆறுவதற்குள் பஞ்சாபில் 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் மொத்தமாக காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.
இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 11-ம் தேதி இன்று பஞ்சாப் செல்ல செல்ல இருந்த நிலையில் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் 90 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: புதிய MLA களில் 31 கிரிமினல்கள்..! 17 பேர் மீது கொலை வழக்கு..! தலை சுற்றும் தலைநகர் அரசியல்
இந்தக் குழப்பம் ஒரு பக்கம் இருக்க பாஜகவை தண்ணி குடிக்க வைத்தும் ஆட்டம் காட்டியும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் மேயர் பதவிக்கும் ஆப்பு வைக்கபட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தம் உள்ள 250 டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களில் 113 பேர் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களில் 119 பேர் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தற்போது டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளதால் அனைத்தும் தலைகீழாக மாற உள்ளது.
பாஜகவின் 113 பேரோடு சேர்த்து 7 எம்பிக்கள் மற்றும் 14 எம்எல்ஏக்களும் வாக்களிக்க தகுதி உடையவர்களாகிறார்கள். இது நடக்கும் பட்சத்தில் ஆம் ஆத்மி மேயர் பதவியும் இழக்க நேரிடும்
ஆம் ஆத்மி வசம் இருந்து ஒரே ஒரு மேயர் பதவியும் தற்போது பறிபோக உள்ள சூழ்நிலையில் மொத்தமாக இடிந்து போய் உள்ளாராம் அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.
அதிலும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பணக்கார மாநகராட்சியான எம். சி.டி மீது பாஜக அதிக கவனம் செலுத்துவதால் நிச்சயம் அதை கைப்பற்றாமல் விடமாட்டார்கள் என்று அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்
இதையும் படிங்க: ராணிப்பேட்டை காந்தி ஊழலின் உறைவிடம்.. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறை தண்டனை நிச்சயம்..! அண்ணாமலை ஆவேசம்