×
 

துபாயில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. கலந்துக்கொண்ட தமிழக நடிகர்!!

துபாயில் தவெக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த நடிகர் ஒருவர் பங்கேற்று சிறப்பித்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து வெளி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள தொடங்கிய விஜய், தனது கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமலான் இப்தார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 5 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார். தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வெள்ளை வேட்டி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து நோன்புக்கு வந்த அவர், தொழுகை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பு திறந்தார்.

இதையும் படிங்க: அரசியல் அநாகரீகம் அண்ணாமலை.. செல்வப்பெருந்தகை கடும் தாக்கு.. செந்தில் பாலாஜி, விஜய்க்கு சப்போர்ட்..!

இது ஒருபுறம் பேசுபொருளாக மாறினாலும் மறுபுறம் சர்ச்சையும் ஆனது. முஸ்லிம்களை அவமதித்ததாக  தமிழ்நாடு சுன்னத் ஜமாத் விஜய் மீது புகார் அளித்தது. அதில், இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலர் குடிகாரர்கள் மற்றும் குண்டர்கள் என்பதால் முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அமீரகத்தில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்த இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் சொளந்தர ராஜா கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார். பின்னர் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கும், மண்ணுக்கும் சேவை செய்ய வந்த அரசியல் கழகம். பொறாமை பிடித்த பலர் நம் மீது விமர்சனங்களை முன்வைப்பர்.

அத்தகைய விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கு தமிழர்கள் யாருக்கு, எந்த பிரச்சனை என்றாலும் தமிழக வெற்றிக் கழகம் தோழர்கள் அவர்களுக்கு முன் நின்று உதவ வேண்டும், என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நான் என்ன விஜய்யை போல் நடிகையின் இடுப்பை கிள்ளியா அரசியல் செய்கிறேன்..? அண்ணாமலை ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share