×
 

தேமுதிகவுக்கு எம்.பி சீட்டை மறுத்த எடப்பாடியார்... பிரேமலதாவின் ரியாக்சன் என்ன தெரியுமா?

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றிய கேள்விக்கு...

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்த நிலையில், ''தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக நாங்க எப்போது சொன்னோம்?''எடப்பாடி பழனிசாமி  என பேசியது தேமுதிகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

அதிமுக தலைமையில் கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்படாத நிலையில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. இதே போல அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் திமுக கூட்டணியிடம் அதிமுக தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா பதவியிடங்களுக்கு இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூட்டணி அமைத்த போதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இவங்கள தோற்கடிக்க யாரு கூட வேணாலும் கூட்டணி வைப்போம்.. ஒரே போடாக போட்ட எடப்பாடி!!

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது என தெரிவித்தார். எங்களது ஒரே எதிரி தி.மு.க தான் என கூறிய அவர்,  மற்ற எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். வாக்குகள் சிதறாமல் அதனை ஒருங்கிணைத்து தி.மு.க-வை வீழ்த்துவது தான் எங்களது முதன்மையான கடமை என கூறினார். 

எனவே இதனை  2026 தேர்தலில் நாங்கள் நடத்திக் காட்டுவோம் என தெரிவித்தார்.  தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து ஆறு மாதங்களுக்கு பின்னர் கேளுங்கள் என தெரிவித்தார். அடுத்தாக தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்க இருப்பதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விக்கு தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படும் என்று நாங்கள் கூறினோமா? மற்றவர்கள் கூறுவதன் அடிப்படையில் என்னிடம் கேள்வி எழுப்பாதீர்கள்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றிய கேள்விக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எந்தப் பதிலும், அளிக்காமல்  சென்றார்.

இதுகுறித்து எதிர்கட்சியினர், ''துரோகம் செய்வது எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிதல்ல.சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், இப்போ பிரேமலதா.விஜய் உஷாராக இருக்கவேண்டும்'' எனத்தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: கனிமவளக் கொள்ளையை கண்டித்து அதிமுக சார்பில் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share