×
 

எடப்பாடி ஓ.கே. சொன்னா அடுத்த நொடியே அதைச் செய்ய தயார்... ஓபிஎஸை எச்சரித்த ஆர்.பி. உதயக்குமார்...!

அதிகாரம் வேண்டுமென்றால் அமைதியாக இருப்பார், அதிகாரம் இல்லை என்றால் எந்த எல்லைக்கும் பன்னீர்செல்வம் போவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சகட்டுமேனிக்கு சாடியுள்ளனர். 

அதிகாரம் வேண்டுமென்றால் அமைதியாக இருப்பார், அதிகாரம் இல்லை என்றால் எந்த எல்லைக்கும் பன்னீர்செல்வம் போவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சகட்டுமேனிக்கு சாடியுள்ளனர். 


மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், “சத்தியம் செய்து இப்போதும் சொல்கிறேன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான தொண்டர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி உழைத்து வளர்த்து ,இன்னைக்கு மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தின் வழிநடத்தி வரும் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணையிட்டால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா தாயின் மீது ஆணையிட்டு சொல்கிறேன், இந்த நிமிடமே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கிற பொறுப்பு,  புரட்சித்தலைவி அம்மா பேரவை  பொறுப்பிலிருந்தும்,  மாவட்ட கழக செயலாளர், ஏன் சட்டமன்ற உறுப்பினர் என்கிற பொறுப்புகளில் இருந்து கூட கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கும் நான் தயங்கமாட்டேன். 

ஏன் இதை சொல்லுகிறேன் என்று சொன்னால், நான் பதவிற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஒரு நாளும் ஒருபோதும் ஆசைப்பட்டவன் அல்ல. நான் வகிக்கின்ற இந்த பொறுப்புகள் எல்லாம் விசுவாசத்தோடு நான் பணியாற்றவைக்காக தலைமை என்னை தேடிக் கொடுத்த பதவிகள் தானே தவிர அங்கீகாரம் தவிர, நான் தேடிப்போய் பெற்ற பதவிகள் அல்ல என்பதை இந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இதையும் படிங்க: “யாருகிட்ட… எடப்பாடியார் டா… “ - திமுகவை அதிர வைத்த ஆர்.பி.உதயக்குமார்… 82 மாவட்டங்களில் அதிரடி …!

உங்களைப் போன்று அதிகாரத்திற்காக, பதவிக்காக செயல் நடவடிக்கையில் நின்றது இல்லை. பதவிக்காக, அதிகாரத்திற்காக, கட்சிக்கும் தலைமைக்கும் என்றைக்கும் மாற்று சிந்தனையோ, எதிர் சிந்தனையோ கொண்டவன் இல்லை இந்த உதயகுமார் என்பது அதிமுக தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்றாக தெரியும்.

 அன்றைக்கு ஜெயலலிதா இருந்தபோது டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார். தயவு செய்து  அதை சொல்லுங்கள் ,உங்களுடன் நான் எந்த நிலையில் அமர்ந்திருந்தேன் என்பதை நீங்கள் சொல்லுங்கள்,நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன்.

 ஆகவே தயவு செய்து நீங்கள் ஏதோ ஒரு மூடுமந்திரம் போல நீங்கள் வைத்திருப்பதனால் என்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை என் கழகப் பணி மீது ,நான் தலைமை மீதும் கொண்டிருக்கும் விசுவாசத்தின் மீதும் நீங்கள் களங்கும் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  எங்களை ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று  பிரச்சனையை திசை திருப்புகிற பாணியில்  நீங்கள் பேசி வருவது ஆண்டவனுக்கே பொருக்காது, இந்த கோடான கோடி அனைத்து கழகத்தினுடைய அப்பாவி தொண்டர்களையும், தமிழக மக்களையும் இனியும் நீங்கள் ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிலை கூட நான் சொல்கிறேன் . வாய்க்கு வந்ததை பழி சுமத்தி  சொல்லி வருகிறீர்கள். 

உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்றால் அதற்காக எந்த எல்லைக்கும் நீங்க போவீர்கள் என்பதைத் தான் இந்த சமீப கால நடவடிக்கைகள் எடுத்து காட்டுகின்றன. உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் பிரச்சனை இப்போது பிரச்சனை நீங்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான். நீங்கள் இப்போது நடத்துகிற இந்த செயலிலே உண்மை இருக்கிறது என்பது அப்பாவி தொண்டர்கள் அறிய மாட்டார். 

ஏனென்றால் எங்களைப் போன்றவர்கள் அதை நன்றாக அறிவோம்,  அந்த அப்பாவி சாமானிய ஏழை எளிய தொண்டர்களுக்கும் மக்களுக்கும் இந்த உண்மை புரிய வேண்டும். அதிமுக ஒன்றாக இருப்பதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பதை கட்சி தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள் என்றார். 

உங்களுக்கு நேரம் கிடைத்தால் ஒரு நிமிடம் மனசாட்சியிடம் கேளுங்கள் அத்தனை முன்னாள் அமைச்சர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும்   நீங்கள் பெற்றெடுத்த மகனுடைய இல்லங்களில் நேரிலே வந்து இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்துகிற போது கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும், வலிமையாக இருக்க வேண்டும் இது  ஜெயலலிதா உழைத்து உயிரைக் கொடுத்து உருவாக்கிய இந்த இயக்கம் கோடான கோடி தொண்டர்கள் உதிரத்தை சிந்தி வளர்த்த இந்த இயக்கம் உங்கள் ஒருவருக்காக இந்த இயக்கத்தை நீங்கள் பழி கொடுத்து விடாதீர்கள் என பேசினோம்

 ஆனால் இன்றைக்கு நீங்கள் ஒற்றுமைக்காக ஏதோ தடையாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்தியுள்ளீர்கள். இனியும் அப்பாவி தொண்டர்களை உங்களால் ஏமாற்ற முடியாது என சகட்டுமேனிக்கு ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்துள்ளார். 


 

இதையும் படிங்க: திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி... எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share