×
 

அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைப்பா..? இப்படி சொல்லிட்டாரே அதிமுக மூத்த தலைவர்..!

ஓ. பன்னிர்செல்வம் இணைப்பு என்பது முடிந்து போன விஷயம். அதைப் பற்றி பேச வேண்டாம் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தொடங்கிய உள்கட்சி பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கிறது. தொடக்கத்தில் இரட்டைத் தலைமையுடன் செயல்பட்டு வந்த அதிமுக, 2023இல் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினையால் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது முதலே நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அதிமுக படிக்கட்டுகளை மிதித்து வருகிறது.

என்றாலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அணிகள் இணைய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதிமுகவில் ஓபிஎஸ்ஸை சேர்க்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக் பேசியுள்ளார்.  ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய் முணுசாமி,  “இருமொழிக் கொள்கை என்பது ஸ்டாலினுக்கு சொந்தமானது அல்ல. அண்ணா இருமொழி கொள்கைதான் வேண்டும் என்று அன்றைய பிரதமராக இருந்த நேருவிடம் உறுதி பெற்றுக் கொண்டார். அதை அண்ணா தலைமையிலான நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு நடந்துக் கொள்கிறோம். ஓபிஎஸ் இணைப்பு என்பது முடிந்து போன விஷயம்.பத்திரிகைகளும், ஊடகங்களும் தான் அதனை பெரிதாக்குகின்றன.அதைப் பற்றி பேச வேண்டாம்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான ஆள்கடத்தல் வழக்கு.. 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு..!

நாம் தமிழர் கட்சியிலிருந்து கட்சியினர் விலகுவது என்பது அவரது கட்சிக்குள் நடக்கின்ற விஷயம். அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. தவெக தலைவர் இந்தி எதிர்ப்பில் நாடகமாடவில்லை. அரசியலில் நாடகம் ஆடுகிறார். மும்மொழி கொள்கையில் உதயநிதியும், அண்ணாமலையும் நாடகமாடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஊடகங்களில் செய்தி வர வேண்டும் என்பதற்காக வார்த்தைகளில்  எதிர்வினையான கருத்துகளை சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவுடன் கூட்டணி இல்லை- விஜய் திட்டவட்டம்..! திமுக vs தவெக-வாக மாறும் அரசியல் களம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share