அதிமுகவின் தெளிவு... விஜயின் குழப்பம்... ஸ்டாலினின் பதற்றம்- பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..!
நேற்று இரவு நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை போல. அதனால்தான் இன்று காலை முதல் வேலையாக அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
''2026 இல் ஒரு வேள்வியான சபதம் எடுத்து இருக்கிறோம்'' என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மாநில தலைவராக பொறுப்பேற்றவுடன் அவருடைய முதல் கட்டளை என்று தான் சொல்வேன். செருப்பு போட வேண்டும் என்கிறார். எப்போதும் ஒரு மாநில தலைவர் சொல்வதைக் கேட்பது என்னுடைய கடமை. அது எங்களுடைய கட்டாயம். அது மட்டும் இல்லை. அவர் செருப்பை வாங்கிவிட்டே வந்து விட்டார். ஒரு மாநில தலைவர் சொல்லும் போது அதை தட்டுவது மிகவும் தவறு. ஆகையால் மாநில தலைவர் நயினார் அண்ணன் செருப்பை வாங்கிப் போட வைத்துவிட்டார்.
ஆகையால் எனக்கு நிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது. 2026 இல் ஒரு வேள்வியான சபதம் எடுத்து இருக்கிறோம். கட்சியில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு அவர் வாங்கி கொடுத்த செருப்பை இன்று நான் மேடையில் அணிந்து கொண்டேன். நிச்சயமாக 2026 திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் செருப்பு போட்டு இருப்பதை விட முக்கியம் பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக எங்களுடைய சட்டமன்ற குழு தலைவர் அண்ணன் நைனார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு இதுதாங்க காரணம்.. மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் ஒரே போடு.!
இன்று பொறுப்பேற்று இருக்கிறார். நிச்சயமாக கட்சி இன்னும் வேகம் எடுக்கும். 2026 இல் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதற்கு கடுமையாக உழைப்போம். புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்கிற ஒரு பெரிய குறிக்கோளை கையில் எடுத்திருக்கிறார். அது நடந்து கொண்டிருக்கிறது. வருகின்ற காலத்தில் அது இன்னும் சிறப்பாக நடக்கும்.
இன்றிலிருந்து நான் ஒரு தொண்டன். இன்று மாலை 5 மணி வரை இந்த கட்சியின் தலைவராக இருந்தேன். கட்சி தலைமையுடைய ஐயா மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுடைய முடிவு. ஒரு முடிவை கட்சி எடுத்த பிறகு அந்த முடிவுக்கு ஏற்றார் போல தொண்டன் நடந்து கொள்வதுதான். நான் இன்றைக்கு எந்த பொறுப்பும் இல்லாத அடிப்படையான ஒரு தொண்டன். ஆகையால் நிச்சயமாக 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
முதலமைச்சரை பொருத்தவரை நேற்று நமது தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான பிறகு அதிமுக தேசிய ஜனநாயக கட்சிக்கு வலிமை சேர்த்த பிறகு தமிழகத்தில் அதிமுக, தேசியத்தில் நமது பிரதமர் மோடி 2026 சட்டமன்ற தேர்தலை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இதை சந்திக்கிறது. நேற்று இதைத்தான் அமித்ஷா அறிவித்தார். அதன் பிறகு தமிழகத்தில் மக்கள் மனது எப்படி மாறி இருக்கிறது என்றால் ஒரு வலிமையான கூட்டணி தமிழகத்தில் அமைந்திருக்கிறது. திமுகவை அகற்ற வேண்டும் என்ற முடிவை மக்கள் எடுத்திருக்கிறார்கள்.
நேற்று இரவு நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை போல. அதனால்தான் இன்று காலை முதல் வேலையாக அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய மனக்குமுறலாக தான் அந்த அறிக்கையை பார்க்கின்றேன். அவரது அச்சமாகத்தான் அந்த அறிக்கை பார்க்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை யூகித்து அவர் அறிக்கையாக வெளியிட்டு இருப்பதாக தான் நான் கருதுகிறேன்.
நேற்று நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருந்த பிரஸ்மீட்டில் தெளிவாக சொல்லி இருக்கிறார். காமன் மினிமம் ப்ரோக்ராம் என்கிற முடிவை எடுத்து இருக்கிறோம். இரண்டு கட்சிகளும் அடிப்படையிலே வேறு வேறு சித்தாந்தங்கள் இருக்கக்கூடிய கட்சிகள். 2024 தனியாக போட்டியிட்ட கூட்டணி கட்சிகள். 2026 இல் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றோம். நிறைய விஷயங்களில் அதிமுகவின் கொள்கை முடிவு மத்தியில் ஆட்சியில் இருக்க கூடிய பாஜகவுக்கு சில இடங்களில் வேறுபாடு இருக்கிறது. குறைந்தபட்சம் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகள். ஆகையால் யாருக்கும் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.
தமிழகத்திற்கு நிச்சயமாக சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. ஆகையால் அன்பு சகோதரர் விஜய் தேவையில்லாமல் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக வைத்த துரோக கூட்டணிகள்… குல்லுகபட்டர் முதல் லீலாவதி போட்டோ வரை..!