×
 

திருந்துமா அடிவருடி அடிமை பாகிஸ்தான்..? ராஜ தந்திரங்களால் வியக்க வைக்கும் ஆப்கானிஸ்தான்..!

பாகிஸ்தானைப் போல ஆப்கானிஸ்தான் அரசும் கடன்கள் மற்றும் நிதி உதவிக்காக உலகை நோக்கி கைகளை நீட்டுவதற்குப் பதிலாக அதன் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 

கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்ல, ராஜதந்திரம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச அளவில் தனது வலுவான நிலையை உருவாக்குவதிலும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு ஒரு சவாலாக மாறி வருகிறது. சமீபகாலமாக, பாகிஸ்தான் பலவீனமடைந்து வரும் அனைத்து துறைகளிலும் ஆப்கானிஸ்தான் வலிமையைக் காட்டி வருகிறது. கைபர் பக்துன்க்வாவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள், அமெரிக்கா, சீனா மீதான பாகிஸ்தானின் அடிபணியும் மனப்பான்மை, ஆப்கானிஸ்தானின் சுயசார்பு வெளியுறவுக் கொள்கை ஆகியவை இதற்குப் பெரிய முன்னுதாரணம்.

பாகிஸ்தான் நீண்ட காலமாக பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. ஆனால் இப்போது அதே பயங்கரவாதம் அந்நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. கைபர் பக்துன்க்வாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளன.

இப்போதெல்லாம், பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் போன்ற ஒரு சூழ்நிலை நிலவுகிறது. அல்லது எந்த நேரத்திலும் அங்கு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம் என்கிற நிலையில் உள்ளது. அத்தோடு, கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தானில் நடக்கும் தாக்குதல்கள் எப்போது பாகிஸ்தானின் சிதைவுக்கு வழிவகுக்கும் என்று சொல்ல முடியாது.

இதையும் படிங்க: ஐசிசி கிரிக்கெட் போட்டிக்கு காவலுக்கு செல்லாத 100 போலீசார் டிஸ்மிஸ் ..! சாட்டை எடுத்த பாகிஸ்தான் அரசு..!

ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா பகுதியில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் போன்ற குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அரசு இந்த பயங்கரவாத குழுக்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டாலும், பயங்கரவாதிகளுக்கு காபூலில் இருந்து ஆதரவு கிடைப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.

அதே நேரத்தில், தாலிபான் ஆட்சியின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தானைப் பார்த்தால், அங்கு ஆட்சியில் இருக்கும் தாலிபான்கள் எந்த எதிர்ப்பு அமைப்பையும் தோன்ற அனுமதிக்கவில்லை. நிர்வாகத்தைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை விட மிகவும் முன்னேறியுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, உக்ரைனாக இருந்தாலும் சரி, ஹமாஸ் போன்ற அமைப்பாக இருந்தாலும் சரி, பல நாடுகள் அவருக்கு முன்பாக சரணடைந்துள்ளன. சீனாவுக்கு ஆதரவாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு எதிராகப் பேசவே முடியாத இந்தத் தொடரில் பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்ப்பை விட்டுவிடுங்கள், பாகிஸ்தானால் தனது கருத்தை முன்வைக்கக் கூட முடியவில்லை.

அதே நேரத்தில், தாலிபான்கள் அதிசயங்களைச் செய்கிறார்கள். அவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் கூட சவால் விடுகிறார்கள். சமீபத்தில், அமெரிக்கா தனது ஆயுதங்களைத் திருப்பித் தருமாறு ஆப்கானிஸ்தானிடம் கேட்டபோது, ​​தாலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சர், அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்கள் மீது இப்போது தாலிபான்களுக்கே உரிமை உண்டு, அமெரிக்காவிற்கு அல்ல என்று கூறி அதிரடி காட்டினார். இதுபோன்ற பதிலடிகளால் ஆப்கானிஸ்தான் எவ்வளவு வலிமையாகிறது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

பாகிஸ்தான் சீனாவுக்கு அடிபணிந்து, அதன் கடன் வலையில் சிக்கி இருக்கும் அதே வேளையில், ஆப்கானிஸ்தான், சீனாவின் தலையீட்டைக் கட்டுப்படுத்தியுள்ளது. சீன முதலீடுகள் மற்றும் திட்டங்கள் மீது பாகிஸ்தானில் பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இருந்தபோதும், பாகிஸ்தான் அரச்ய், சீனாவுக்கு அடிபணிந்து செயல்படுவதை நிறுத்திக் ககொள்ளவில்லை. 

இருப்பினும், இந்த விவகாரத்தில் பலுசிஸ்தானில் சீனத் தொழிலாளர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடப்பதாகவும், இந்தத் தாக்குதல்கள் தலிபான்களின் ஆதரவு எங்கோ இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பாகிஸ்தானின் பாதுகாப்பு நிறுவனங்களின் கவலையை அதிகரித்துள்ளது. மறுபுறம், ஆப்கானிஸ்தான் சீனாவுடன் சமநிலையான உறவுகளைப் பேணுகிறது. அதற்காக சீனாவின் விதிமுறைகளின்படி செயல்பட வேண்டிய கட்டாயம் இல்லை. தாமதமாகிவிட்டாலும், ஆம், இப்போது ஆப்கானிஸ்தானும் மெதுவாக அதன் ராஜதந்திரத்தை வலுப்படுத்தி வருகிறது.

தாலிபான் அரசின் வருகைக்குப் பிறகும், ஆப்கானிஸ்தான் சர்வதேச அளவில் தன்னை ஒரு வலுவான சக்தியாக நிலைநிறுத்த முயற்சித்துள்ளது. பல நாடுகள், குறிப்பாக ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள், ஆப்கானிஸ்தானுடன் சிறந்த உறவை விரும்புகின்றன. பாகிஸ்தான் பெரும்பாலும் உலகளாவிய தளங்களில் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அதன் புதிய முக்கிய நட்பு நாடுகளுடன் முன்னேறி வருகிறது.

பாகிஸ்தான் நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானை பலவீனமான பொருளாதாரம், உதவி சார்ந்திருக்கும் நாடாகக் கருதியது. ஆனால் நிலைமை மாறிவிட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை வர்த்தக ரீதியாக சார்ந்திருப்பதைக் குறைத்து, இப்போது மற்ற நாடுகளுடன் சுயாதீன வர்த்தக ஒப்பந்தங்களில் செயல்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: அமெரிக்காவில் பாகிஸ்தானின் ஆடம்பர ஹோட்டல்… 'விளையாட்டு'க்கு ஆப்பு வைத்த டிரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share