×
 

மகனா? மல்லை சத்யாவா? குழப்பத்தில் வைகோ.. பாமகவை அடுத்து மதிமுகவிலும் மல்லுக்கட்டு..! 

மகன் முக்கியமா இல்லை மல்லை சத்யாவா என்ற குழப்பத்தில் திணறிக் கொண்டிருக்கிறார் வைகோ. பாமகவை அடுத்து மதிமுகவிலும் மகனால் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. 

கடந்த வாரம் பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்த அரசியல் பஞ்சாயத்தே இதுவரை தீர்வு காணப்படாமல் நீடித்து வருகிறது. இதனிடையே தற்போது  துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையில் இருந்த பிரச்சனை வெளிப்படையாகவே வெடித்து மதிமுகவில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் முதன்மை செயலாளர் பதவி கொடுத்தது அக்கட்சியின் சீனியர்களுக்கு கடும் ஆத்திரத்தை கொடுத்தது. வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவே இப்படி செய்யலாமா என அதிருப்தியில் மதிமுகவை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். ஆனால் வைகோவின் வலதுகரமாக இருக்கும் மல்லை சத்யா மட்டும் கட்சியில் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

துரை வைகோ பதவிக்கு வந்ததிலிருந்தே அவரது ஆதரவாளர்கள் மல்லை சத்யாவை ஓரங்கட்டி வருவதாக கூறப்படுகிறது. மதிமுக நிகழ்ச்சிகளில் கூட அவரது போட்டோவை போடாமல் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் கட்சியில் சாதி பார்த்துதான் பதவி கொடுப்பதாக மல்லை சத்யா ஆதரவாளர்கள் துரை வைகோவை டார்கெட் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டம் மேலே போய் திருச்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என துரைவைகோ ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!!

மேலும் மல்லை சத்யாவுக்கு எதிராக சமூக வளைத்தலங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து சென்னை தாயகத்தில் வைகோ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. நிர்வாகிகளை நியமிப்பதில் சாதி பாகுபாடு பார்ப்பதாக சிலர் குற்றம் சாட்டியதால் துரை வைகோ கோபத்தில் கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார். மற்றொரு தரப்பினரோ, ஈவேரா, அண்ணா, வைகோவுக்கு அடுத்தப்படியாக துரைவைகோ மட்டுமே மதிமுகவின் அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் இருக்கலாம் மறுப்பவர்கள் உடனே வெளியேறலாம். இது துரைவைக்கோ காலம் என அவரது ஆதரவாளர்கள் சூழுரைத்துள்ளனர். 

இதனால் துரை வைகோவா அல்லது கட்சியில் இத்தனை ஆண்டுகளாக உழைத்துள்ள மல்லை சத்யாவா என யார் பக்கம் நிற்பது என தெரியாமல் வைகோ குழப்பத்தில் இருப்பதாக சொல்கின்றனர். இந்த நிலையில் மல்லை சத்யா பேஸ்புக் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அதில் எனக்கு அரசியல் முகவரி தந்தது என் அன்பு தலைவர் வைகோ இப்போதும் சொல்கின்றேன.  ஒரு சிலர் எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம், ஆனால் என் அன்பு தலைவர் வைகோ இதயத்திலிருந்து என்னை நீக்குவதற்கு எந்த சக்தியாலும் முடியாது. எனது வாழ்வின் கடைசி மணித்துளியும் வைகோ வைகோ என்றே உச்சரித்து நிறைவு பெறும். வைகோ எனக்கு தலைவர் மட்டுமல்ல எனக்கு தந்தையும் ஆவார். நம்பிக்கேட்டான் சத்தியா என்று வேண்டுமானால் அரசியல் உலகம் என்னை சொல்லலாம். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒருபோதும் வரக்கூடாது என்ற உறுதியோடு மதிமுகவில் பயணிக்கின்றேன் என பதிவிட்டுள்ளார். 

இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுவதற்காக ஏப்ரல் 20ஆம் தேதி மதிமுக நிர்வாக குழு கூட்டத்தை கூட்டுகிறார் வைகோ. சில மாவட்ட கழகங்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது என வைகோ கண்டித்துள்ளார். மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் இதற்கு முடிவு கட்டப்படுமா இல்லை பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு செல்லுமா என்ற பொறுத்திருந்து பார்க்கலாம். 

இதையும் படிங்க: ராணுவம் மீது அவதூறு.. வைகோ எம்.பி. பதவியை ரத்து செய்யணும்... கொந்தளிக்கும் பாஜக.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share