×
 

அமித் ஷா சொன்னது நினைவிருக்கா?... ஸ்டாலினை அவசரப்படுத்தும் அன்புமணி...! 

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். 

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் பேசிய கருத்துக்களை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். 

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையைத் தொடர்ந்து திமுகவிலிருந்து ஆர்எஸ் பாரதி பேசினார். அதனைத் தொடர்ந்து செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சி சார்பில் உரையாற்றினார். அவர் இறுதியாக  நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். இந்த விகிதாச்சார அடிப்படையிலே எடுக்கக்கூடிய முடிவின் காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என உறுதியுடன் தெரிவித்தார். இதனையடுத்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உரையாற்றினார். 

இதையும் படிங்க: நாம படிக்கிறப்ப ஸ்கூலுக்கு வெளியே கம்மர்கட் வித்தாங்க.. இப்போ கஞ்சா விக்கிறாங்க.. திமுக அரசை டாராக கிழித்த அன்புமணி.!

4வது ஆளாக உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி, “பாட்டாளி மக்கள் கட்சி பொறுத்தவரை இந்த கூட்டம் அவசியம் அவசரமும் வாய்ந்தது. அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவையிலே நாங்கள் மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதி கூடும் குறைக்க மாட்டோம் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். ஆனால் இதே கருத்து உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு நாங்கள் எவ்வளவு உயர்த்துவோம் என்று சொல்லவில்லை. 

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்? மத்திய அரசு அவர்களுக்குள் இந்த மறுசீரமைப்பை பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதனால்தான் இந்த கூட்டம் அவசியமானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தென்மாநில முதலமைச்சர்களை நேரிலே சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும், இதை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்னெடுக்க பாமக துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். 
 

இதையும் படிங்க: கலெக்டர், எஸ்.பி.யை மிரட்டுவது தான் திராவிட மாடலா? முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பும் அன்புமணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share