×
 

எஞ்சினில் இருந்து வந்த கரும்புகை.. சட்டென தீப்பிடித்து எரிந்த விமானம்.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய பயணிகள்..!

டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அதில் இருந்த பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்துகளும், விமானத்தில் தீ விபத்து ஏற்படுவது போன்ற நிகழ்வுகளும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீ எரிந்தபடி சென்ற காட்சிகள் வைரலானது. அதேபோல் கனடாவில் கடும் குளிர் மற்றும் அசாதாரண காலநிலை காரணமாக, ரன் வேயில் இறங்கிய போது விமானம் நிலை தடுமாறி, தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவங்களும் அரங்கேறியது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஒருசிலர் மட்டும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதேபோல் விமான பயணி ஒருவருக்கு சிலந்தி கடித்ததால் பயணிகள் அச்சத்துடன் பயணித்த சம்பவமும் நடந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் தலைநகரமான டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று 172 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் கிளம்பி பறக்கத் துவங்கிய சில மணி நேரங்களில் விமான எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதை விமானி உணர்ந்தார். உடனே இதுகுறித்து ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: சிவகாசி ஆலையில் பயங்கர வெடி விபத்து... ஒருவர் பலி...!

ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகமும் உடனே டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரையிரக்கும் படி உத்தரவிட்டனர். டென்வர் சர்வதேச விமானத்தில் மற்றொரு ஓடுபாதையில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. உடனே பயணிகள் வேகமாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். படுகட்டுகள் வழியே பயணிகள் வெளியேறினால் நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் காயமடையலாம் என்பதால் சறுக்கி செல்லும்படி சறுக்குகள் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் உயிர் தப்பினர். இதில் 12 பேருக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பயணிகள் வெளியேறிய சிறுது நேரத்தில் எஞ்சினில் இருந்து கரும்புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களிலேயே விமானம் முழுவதுமாக தீப்பிடித்து எரியத்துவங்கியது. நல்வாய்ப்பாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அந்த விமானம் ஒரு போயிங் 737-800 ரக விமானம் என்றும், அதில் "இயந்திரம் தொடர்பான சிக்கல்" ஏற்பட்டதாகவும் அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது.

விமான நிலையத்திற்குள் இருந்த சிலர், விமானத்தின் பயணிகள் இறக்கையின் விளிம்பை நோக்கி நடந்து செல்வதைக் காட்டும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அதே நேரத்தில் பெரிய கரும்புகை மேகங்கள் போல உருவாகி அந்த இடத்தை சுற்றிலும் சூழ்ந்தன. உடனே தீயணைப்பு படை வீரர்கள் ஏணிகளைத் தள்ளிக்கொண்டே இறக்கையை நோக்கி விரைந்து, மக்களை காப்பாற்றினர்.  அந்த விமானத்தின் வலது எஞ்சினுக்கு அடியில் தீப்பிழம்புகள் எரிவதை பார்க்க முடிகிறது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பெடரல் விமான நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது.
 

இதையும் படிங்க: மருமகனுக்கு தீ வைத்த மாமியார்..! தீயில் கருகிய உடலை பார்த்து ரசித்த குரூரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share