×
 

இனி அதை எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்துக்குவாரு... அண்ணாமலை ஓபன் டாக்!!

இனி என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய  நிலையில் ஏற்பட்டதை அடுத்து நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை தொடங்கினர். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவித்தார். அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தனர்.

அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, இத்தனை நாட்கள் எனக்கென்று ஒரு பொறுப்பு கட்டுப்பாடு இருந்தது. அண்ணாமலையாக நான் அரசியல் பேச முடியும். செய்ய முடியும். அடித்து ஆட கூடிய பாக்சிங் கலை அரசியல்வாதிக்கு தேவைப்படுகிறது.

இதையும் படிங்க: இனி அடிக்கிறதெல்லாம் சிக்ஸர்தான்... அண்ணாமலையின் ஆக்ரோஷ அரசியல்... அடுத்த அதிரடிக்குத் தயார்..!

அதனால் இன்னும் கொஞ்சம் பேச்சு ஸ்டைலை மாற்ற வேண்டும்.  பக்குவமாக பேசுவதற்கு நயினார் நாகேந்திரன் இருக்கிறார். கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரனிடம் பேசி கொள்ளுங்கள். இனி நம்ம பாலை மட்டும் நாம அடித்தால் போதும். இனி பவுன்சர்ஸ், டப் பால்ஸ் எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்து கொள்வார்.

இனி நாம சிக்ஸ் அடிப்பது தான் நமது வேலை. கஷ்டமான பால் எல்லாம் நயினார் நாகேந்திரன் ஆடிக்குவாரு.  பாஜக மாநில தலைவராக இத்தனை நாட்கள் எனக்கென்று ஒரு பொறுப்பு, கட்டுப்பாடு இருந்தது. இனி என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும். அண்ணாமலையாக நான் அரசியல் பேச முடியும். செய்ய முடியும். எப்போதுமே அடித்து ஆடக்கூடிய பாக்சிங் கலை அரசியல்வாதிகளுக்கு தேவைப்படுகிறது.

இதனால் இன்னும் பேச்சு ஸ்டைலை மாற்ற வேண்டும். கூட்டணி பற்றி நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். அவர்கள் ஒன்று சொல்கிறார்கள் என்றால் நயினார் நாகேந்திரன் அண்ணனிடம் பேசுங்கள் என்று சிம்பிளாக கூறிவிடலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பங்கேற்றிருந்தார். அவரை பற்றி பேசிய அண்ணாமலை, டி.டி.வி., தினகரன் நேற்று மருத்துவமனைக்கு சென்றது குறித்து 2 நாட்களுக்கு முன்பு கூறினார். டி.டி.வி., இதயம், நல்ல இதயம் என்று தமிழக மக்களுக்கு தெரிந்து இருக்கும்.

நாங்கள் சொன்னால் ஏற்று கொள்வார்களா என்பது தெரியவில்லை. இதயம் நன்றாக இருக்கிறது என அப்பல்லோ மருத்துவமனை சர்டிபிகேட் கொடுத்து இருக்கிறது. நீங்கள் அற்புதமான மனிதர். நீங்கள் நினைக்க கூடிய மாற்றங்கள் எல்லாம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த அமித்ஷா... மைக்கை பிடிங்கி பேசிய அண்ணாமலை... என்ன சொன்னார் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share