×
 

நீலிக்கண்ணீர் வடிக்காதீங்க... ரூ.100 மானியம் எங்க? - திமுகவை பொளந்தெடுத்த அண்ணாமலை!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதர வகை சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இதுகுறித்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை ஏற்றாதீர்கள் என கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களை ஒன்றிய அரசு தள்ளிவிட்டதாகவும், நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது சாடிஸ்ட் பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும் என்றும் காட்டமாக தெரிவித்துள்ள முதல்வர், அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியை குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகி விட்டதாகவும் கடுமையாக சாடியுள்ளார். 

இதையும் படிங்க: பொய் பேசிய ஸ்டாலின்… திமுகவுக்கு டார்க்கெட்- அண்ணாமலையின் அடுத்த ஆட்டம்..!

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  “நமது நாடு, ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டில் சுமார் 60%, இறக்குமதியையே சார்ந்துள்ளது. சர்வதேச அளவில், சமையல் எரிவாயு நிர்ணயம் செய்யும் சவுதி ஒப்பந்த விலை, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் $385 ஆக இருந்தது, 2025 பிப்ரவரியில், $629 ஆக, 62% விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.200 விலை குறைக்கப்பட்டது. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மகளிர் தினத்தை முன்னிட்டு, மேலும் ரூ.100 விலை குறைப்பு செய்யப்பட்டது. 

கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவிலான சமையல் எரிவாயு விலை உயர்வு, நமது நாட்டு மக்களை பாதிக்காமல், விலை குறைக்கப்பட்டே வந்திருக்கிறதே தவிர அதிகரிக்கப்படவில்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதுமே, சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு ₹803 ஆகவே இருந்தது. உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.300 மானியத்தோடு, சிலிண்டர் விலை ரூ.503 ஆகவே இருந்து வருகிறது.

உண்மை இப்படி இருக்க, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 503 ல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. அதனைப் பற்றி நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட பேசாமல், தற்போது வந்து நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதையும் படிங்க: மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே… மு.க.ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்த விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share