×
 

காலில் செருப்பே போடாமல்.... திமுகவை அகற்றும் சபதத்தின் பாதையில் அண்ணாமலை..!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என்ற தனது சபதத்தில் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என்ற தனது சபதத்தில் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர வைத்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர் திமுக நிர்வாகி என்பதால் ஆளும் கட்சி அவரையும், அவருக்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மையான குற்றவாளியையும் காப்பாற்ற துடிப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

 

டந்த டிசம்பர் 26ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை அறிவித்ததோடு, திமுக எனும் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை செருப்புப் போடப்போவதில்லை என்றும், டிசம்பர் 27ம் தேதி  முதல் 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன்” என்றும் அறிவித்திருந்தார். அன்றைய தினமே தான் அணிந்த ஷூவையும் கழட்டிவிட்டார். 

இதையும் படிங்க: நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் அரசு.. திமுக அரசு மீது அண்ணாமலை ஆவேச தாக்கு!

அண்ணாமலையின் இந்த அறிவிப்பை வழக்கம்  போல் சோசியல் மீடியாக்களில் ட்ரோல் செய்த திமுக உ.பி.க்கள் ஒரு மேலே போய் செருப்பு அணிய மாட்டேன் என சொல்லிவிட்டு, அண்ணாமலை ஷூ அணிந்து கொண்டு வலம் வருவதாக போலியான புகைப்படங்களை பரப்பினர். ஆனால் அண்ணாமலை ஷூ அணிந்திருக்கும் அந்த புகைப்படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது  எனவும் தெளிவுபடுத்தப்பட்டது. 

இந்நிலையில் அண்ணாமலை சொன்ன சொல் தவறாமல் இன்று வரை காலில் செருப்பு அணியாமல் தான் நடந்து வருகிறார். எங்கு சென்றாலும் சரி, யாரைச் சந்தித்தாலும் சரி காலனி அணியாமல் அண்ணாமலை வலம் வரும் புகைப்படங்களை  பாஜகவினர் அதிக அளவில் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். சொன்னதை செய்து காட்டுவதில் வல்லவரான அண்ணாமலை நிச்சயம் தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்றிக் காட்டுவார் என பாஜக தொண்டர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.  

சமீபத்தில் மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கு முன்னதாக அரிட்டாபட்டியில் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களைச் சந்தித்த அண்ணாமலை, டங்ஸ்டன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என உறுதியளித்தார். அத்துடன் அங்கிருந்த சில விவசாயிகள் மற்றும் போராட்டக்காரர்களை டெல்லி அழைத்துச் சென்று, மத்திய சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரடியாக சந்திக்க வைத்தார். அவர்கள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சரிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மறுநாளே டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மதுரை மக்கள் தன்னெழுச்சியாக போராடிய இப்போராட்டம் வெற்றியை எட்ட முக்கியமான காரணமாக அண்ணாமலை செயல்பட்டார். இந்த நிகழ்வுகளில் மேலூரில் போராட்டக்காரர்கள் உடனான சந்திப்பு மற்றும் டெல்லியில் அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்திக்கும் போது கூட அண்ணாமலை செருப்பு, ஷூ என எதுவும் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக டெல்லி வரை சென்றாலும் தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் செயல்பட்ட அண்ணாமலையின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அரிட்டாபட்டி விவகாரத்தை எப்படி கில்லி போல சொல்லி அடித்தாரோ, அதேபோல் திமுக ஆட்சியை அகற்றும் விவகாரத்திலும் அண்ணாமலை நிச்சயம் வென்று காட்டுவார் என பாஜக தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர். 

இதையும் படிங்க: திமுக ஒரு நாடக கம்பெனி.. கருணாநிதியை மிஞ்சும் திரைக்கதை.. திமுக அரசை டாராகக் கிழித்த அண்ணாமலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share