அரசியலமைப்புச் சட்டம் 142 (Article 142) என்றால் என்ன? உச்ச நீதிமன்றத்தை ஜெகதீப் தனகர் ஏன் கேள்வி எழுப்பினார்?
அரசியலமைப்புச் சட்டம் 142 (Article 142 ) என்றால் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவை ஒப்புதலுக்காக அனுப்பும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கடுமையாகத் தெரிவித்தது. இதையடுத்து, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தனகர், உச்ச நீதிமன்றம் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநிலங்களவைக்கு பயிற்சிக்காக வந்திருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தனகர் பங்கேற்று “அரசியலமைப்பு வழங்கிய எல்லைகளைக் கடந்து உச்சநீதிமன்றம் செயல்படுவது” குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ARTICLE 142 ஒரு அணு ஆயுதம்..! உச்சநீதிமன்றம் குறித்து துணை ஜனாதிபதி கடும் விமர்சனம்..!
உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்பட முடியாது, ஜனநாயக அமைப்புகள் மீது அணு ஆயுத்தை ஏவ முடியாது. சட்டம் இயற்றும், நிர்வாகப் பணிகளைச் செய்யும், சூப்பர் பார்லிமென்டாகச் செயல்படும் நீதிபதிகள் எங்களிடம் உள்ளனர், நாட்டின் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாததால் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.
குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் 142 பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கிய உச்சபட்ச அதிகாரம் குறித்தும், ஜனநாயக அமைப்புகள மீது எந்தநேரத்திலும் அணு ஆயுதத்தை ஏவலாம். அரசியலமைப்புச் சட்டம் 142 பிரிவு அணுஆயுதம் போல் இருக்கிறது என்று விமர்சித்தார்.
உண்மையில் அரசியலமைப்புச் சட்டம் 142 பிரிவு என்றால் என்ன, எதைக் குறிக்கிறது, எதற்காக விமர்சிக்கப்பட்டது என்பதைக் காணலாம்.
அரசியலமைப்புச் சட்டம் 142 பிரிவு என்ன சொல்கிறது?
அரசியலமைப்புச் சட்டம் 142 பிரிவு உச்ச நீதிமன்றத்தின் இருக்கும் எந்த வழக்கிற்கும் முழுமையான நீதி வழங்க அதிகாரத்தை வழங்குகிறது. இந்த விதி அரசியலமைப்பு கருவியாக செயல்பட்டு ஏற்கனவே உள்ள சட்டங்களில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கவும், சட்டப்பூர்வ விதிகளுக்கு அப்பால் செல்லவும், அரசியலமைப்பின் எல்லைக்குள் நீதியை வழங்கும் வரை, எழுதப்பட்ட சட்டத்திற்கு கண்டிப்பாக இணங்காத தீர்வுகளை வழங்கவும் உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 118 - எந்த விவாதமும் இல்லாமல் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதன் விளக்கம் மற்றும் எல்லைகள் காலப்போக்கில் உச்ச நீதிமன்றத்தின் சொந்த விருப்பத்திற்கு பெரும்பாலும் விடப்பட்டன.
அரசியலமைப்புச் சட்டம் 142 பிரிவை உச்ச நீதிமன்றம் அரிதானவழக்குகளில் பயன்படுத்துகிறது. குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்தல், அரிதான வழக்கில் விவாகரத்து வழங்குதல், போபால் விஷவாயு சோகம், ராமர் கோயில் விவகாரம், பாபர் மசூதி இடிப்பு போன்ற சிக்கலான வழக்குகளில் தீர்வு காம 142 பிரிவு பயன்படுத்தியுள்ளது. பொது நலனுக்காக அரசு அமைப்புகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கவும், கொள்கை மாற்றங்களை பரிந்துரைக்கவும், வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தவும் நீதிமன்றத்திற்கு பிரிவு 142 உதவியுள்ளது.
முக்கிய அரசியலமைப்பு விதிகளை மீறவோ, வழக்கில் தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை மீறவோ அல்லது இயற்கை நீதியின் கொள்கைகளை மீறவோ உச்ச நீதிமன்றம் அரசியலமைப்புப் பிரிவு 142 பயன்படுத்த முடியாது.
அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில், அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்துவது மற்றும் குறைபாடுடைய சட்டம், பொது நலன் சார்ந்த விஷயங்களில் இருக்கும் கவலைகளை நிவர்த்தி செய்வதில் பிரிவு 142 நீதிமன்றம் குறிப்பிட்ட சூழல்களில், பயன்படுத்த அனுமதிக்கிறது.
இதையும் படிங்க: டெல்லி நீதிபதி வீட்டில் ரூபாய் நோட்டுகள் எரிந்த விவகாரம்.. FIR ஏன் பதிவாகவில்லை? குடியரசு துணைத் தலைவர் கேள்வி..!