×
 

செயற்கை இதயத்துடன் 105 நாட்கள் வாழ்ந்த அதிசய மனிதர்..! ஆஸ்திரேலியாவில் உலக சாதனை..!

ஆஸ்திரேலியாவில் செயற்கை இதயத்துடன் 105 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார் 40 வயதான நபர் ஒருவர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், டைட்டானியம் செயற்கை இதயத்துடன் 100 நாட்களுக்கு மேல் வாழ்ந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல் நபராக உலக சாதனை படைத்தார். BiVACOR முழு செயற்கை இதயம் பொருத்தப்பட்ட இது, “முழுமையான மருத்துவ வெற்றி” என சிட்னியின் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை, மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் BiVACOR (அமெரிக்க-ஆஸ்திரேலிய நிறுவனம்) ஆகிய நிறுவனங்கள் அறிவித்தன.

40 வயதுடைய இந்த நபர் பெயர் வெளியிட மறுத்துவிட்டார், கடுமையான இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த நவம்பர் 22, 2024 அன்று, சிட்னியில் ஆறு மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு BiVACOR சாதனம் பொருத்தப்பட்டது. 105 நாட்கள் அதனுடன் வாழ்ந்த அவர், மார்ச் தொடக்கத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை பெற்றார். இது, BiVACOR நோயாளியின் நீண்டகால உலக சாதனையாகும். 

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் 5 பெண்கள் பாலியல் பலாத்காரம்... இந்திய மத தலைவருக்கு 40 ஆண்டுகள் ஜெயில்..!

BiVACOR, உலகின் முதல் சுழல் ரத்த பம்ப் செயற்கை இதயமாகும், காந்த லெவிடேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு இதயத்தை மாற்றுகிறது. இதில் மினி-பம்ப் (இறுதி நிலை நோயாளிகளுக்கு) மற்றும் இடது வென்ட்ரிகுலர் உதவி சாதனம் (LVAD) ஆகியவை இயற்கை இதயத்தை தொடர்ந்து இயங்கச் செய்கின்றன.

ஜூலை 2024-ல் டெக்சாஸ் இதய நிறுவனத்தில் தொடங்கிய இது, ஆறாவது உலகளாவிய மற்றும் ஆஸ்திரேலியாவின் முதல் பொருத்துதலாகும். உலகில் 23 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆண்டுக்கு 6,000 பேருக்கு மட்டுமே நன்கொடை இதயம் கிடைக்கிறது. இந்த தொழில்நுட்பம் “இதய செயலிழப்பு சிகிச்சையை மொத்தமாக புரட்டிப்போடும் என செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையின் இதயநோய் நிபுணர் பேராசிரியர் கிறிஸ் ஹேவர்ட் கூறினார்.

அடுத்த பத்தாண்டுகளில், நன்கொடை இதயத்திற்காக காத்திருக்க முடியாதவர்களுக்கு செயற்கை இதயம் மாற்றாகும்,” என்றார். 105 நாள் பயணம், இதன் திறனை உறுதிப்படுத்தி, லட்சக்கணக்கான இதய நோயாளிகளுகக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்துள்ளது.

இதையும் படிங்க: சிறுவன் கையில் துப்பாக்கி, வெடிகுண்டுகள்... அதுவும் விமானத்தில்... என்ன நடந்தது..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share