×
 

சவாரி ஏற்றுவதில் மோதல்.. கத்தியுடன் சுற்றித்திரிந்த ஆட்டோ டிரைவர்கள்.. 9 பேர் கைது, 4 பேருக்கு மாவுக்கட்டு..!

சென்னை மூலக்கடை பகுதியில் ஆட்டோ சவாரி ஏற்றுவதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பழிவாங்கும் எண்ணத்துடன் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 9 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மூலக்கடை பகுதியில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையத்திற்கும் பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து மூலக்கடை சந்திப்பு பகுதிக்கும் தொடர்ந்து ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் அடிக்கடி சவாரி ஏற்றுவதில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு  அவ்வப்போது அவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் இரு பிரிவினராக பிரிந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் இரு தரப்பினரும் சமீபத்தில் மீதிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இரு தரப்பினரும், மீண்டும் மோதிக்கொள்ள வாய்ப்புள்ளதாக கொடுங்கையூர் போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. மோதலை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் போலீசார் தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், ஷேர் ஆட்டோக்களையும் அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக கொடுங்கையூர் போலீசார் நேற்று மூலக்கடை ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து ரோந்து சென்ற போது சில ஆட்டோ டிரைவர்களின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதை அடுத்து அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் ரெட் ஹில்ஸ் அலமாதி பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ்  வயது 24, மற்றும் அவரது கூட்டாளிகளான ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார்  வயது 26 வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஆதி  வயது 19, பார்த்திபன் வயது 26, சுந்தர் வயது 24 என தெரிந்தது.

இதையும் படிங்க: சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. தீர்த்துக்கட்ட திட்டம் போட்டவனை குளோஸ் செய்த கும்பல்..!

அவர்களிடம் நடந்த்திய விசாரணையில் மோதலுக்கு தயாராக வந்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக செயல்பட்ட கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கின்ற கருக்கா கார்த்திக் வயது 24. செல்வ சாலமன் வயது 23. ஹரிஹரன் வயது 20. கார்த்திகேயன் வயது 21 என நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இரு தரப்பிலும் சவாரி ஏற்றும் போது சண்டை ஏற்படுவதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாரையாவது பழித்தீர்க்க வேண்டும் என்பதற்காக ஆட்டோவில் இரு தரப்பினரும் கத்தியை வைத்து நோட்டமிட்டு வந்தது தெரிய வந்தது. 

இதனை அடுத்து இவர்கள் பயன்படுத்திய ஆட்டோவில் இருந்து இரண்டு கத்திகளை பறிமுதல் செய்த போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில் தப்பி ஓடும் போது சஞ்சய். சரண்ராஜ் மற்றும் கருக்கா கார்த்திக். ஹரிஹரன் ஆகிய நான்கு பேருக்கு கீழே விழுந்ததில் கை உடைந்தது. இதனை யடுத்து கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர்  போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யும் அளவிற்கு இரு தரப்பினர் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சென்னை மக்களே உஷார்.. வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு கத்திகுத்து.. டெலிவரி பாய் போல் வீடு புகுந்து துணிகரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share