ஏலேய் மாட்ட விட்றா... களத்தில் வீரரை அடித்த காளையின் ஓனர் - களேபரமான வாடிவாசல்!
மாட்டை இரண்டு பேர் பிடித்ததால் அதன் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்களை அடிக்க பாய்ந்த சம்பவம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாட்டை இரண்டு பேர் பிடித்ததால் அதன் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்களை அடிக்க பாய்ந்த சம்பவம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தனர். இந்த முறை 1100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளனர். தற்போது 10வது சுற்று நடைபெற்று வரும் நிலையில், சீறிப்பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
வீரரை அடித்த காளையின் உரிமையாளர்:
பரபரப்பாக நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், களத்திலேயே மாட்டின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளையை இரண்டு வீரர்கள் அடக்கினர். அதனைப் பார்த்த மாட்டின் உரிமையாளர் மாட்டை விடும்படி எச்சரித்தார். விழா ஏற்பாட்டாளர்களும் ஒரே நேரத்தில் இரண்டு வீரர்கள் மாட்டைப் பிடிக்கக்கூடாது என எச்சரித்தனர். அப்போது ஒருவர் மாட்டின் திமிலை விடுவித்து விலகி நின்ற நிலையில், மற்றொரு வீரர் மாட்டை பிடித்துக்கொண்டே இருந்தார்.
இதையும் படிங்க: காளையர்களை பறக்கவிட்ட காளைகள்; அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 12 பேர் காயம்!
யாருக்கும் எதுவும் இல்ல:
அவரைப் பார்த்து, “மாட்டை விட்றா” என கூச்சலிட்டபடியே சென்ற மாட்டின் உரிமையாளர், கையில் வைத்திருந்த மாடுபிடிக்கும் கயிறால் வீரரைத் தாக்கினார். அப்போது வீரர் மாட்டை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார். இதையடுத்து மாட்டின் வாலைப்பிடித்து உரிமையாளர் முறுக்க, அது திமிரியது. இதனால் வீரர் மாட்டை விடுவித்தார். இருவரும் களத்திலேயே சண்டையிட்டத்தால் விழா ஏற்பட்டாளர்கள் இருவருக்கும் பரிசு கிடையாது என அறிவித்தனர்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காவல்துறை வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!