×
 

மாஸ் என்ட்ரி கொடுத்த எலான் மஸ்க்… விரைவில் இந்தியாவில் ஸ்டார் லிங்க்!!

ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த பாரதி ஏர்டெல் ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ஏர்டெல் நிறுவனம். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு காலத்திற்கேற்ப பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் அள்ளிக்கொடுத்து பல வருடமாக மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. தடையற்ற 5G வீடியோ ஸ்ட்ரீமிங்கில் ஏர்டெல் தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளது. அதன் இணைய வேகம், தங்குதடையற்ற நெட்வொர்க் அதிக வாடிக்கையாளர்களை ஏர்டெல்லுக்கு பெற்று தந்துள்ளது. இந்த நிலையில் பாரதி ஏர்டெல், ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பற்றிய விவரத்தை ஏர்டெல் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதுக்குறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டார்லிங்க்கின் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்துவதற்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் நாட்டில் ஸ்டார்லிங்க் சேவைகளை விற்பனை செய்வதற்கான ஸ்பேஸ்எக்ஸிற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது.

இதையும் படிங்க: அவரு சொன்னா கேட்கணுமா..? டிரம்பை மதிக்காத எலான் மஸ்க்!!

ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இந்தியா முழுவதும் இணைய இணைப்பை ஒத்துழைத்து விரிவுபடுத்துவதற்கு விரிவான வழிகளை ஆராயும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல் அதன் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை விற்பனைக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்டார்லிங்கின் அதிவேக செயற்கைக்கோள் இணையத்தை வணிகங்களுக்கு வழங்கப்படும். டிஜிட்டல் சேவை குறைப்பாட்டை குறைக்க உதவும் வகையில், கிராமப்புற பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் தொலைதூர சமூகங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான இணைய சேவையை கொண்டுவர இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் லிங்க் இந்தியாவில் வருவது குறித்து கடந்த ஓராண்டாகவே பேசப்பட்டு வந்தது.  சமீபமாக அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, அங்கு எலான் மஸ்க்கை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. தற்போது ஏர்டெல் நிறுவனம் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. மேலும் இதன் மூலம் எலான் மஸ்க்கின் நிறுவனம் இந்தியாவில் ஏர்டெல் உடன் இணைந்து அதிவேக செயற்கை கோள் இணையதள சேவையை வழங்கப்போவது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க: 'எலான் மஸ்க்குடன் உடலுறவு கொள்வது... புழு துளைக்குள் செல்லாமல் இருப்பது..! காரித்துப்பிய டிரம்பின் எக்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share