“உயிரைக் கொடுத்தாவது... சிக்கந்தர் தர்காவை இடம் மாற்றியே தீருவேன்...” - கொந்தளிக்கும் எச்.ராஜா!
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை ஆய்வு செய்ய எம்.பி. நவாஸ் கனி தலைமையிலான இஸ்லாமியர்கள் அசைவ உணவு சாப்பிட்டது சர்ச்சையானது. இதனைக் கண்டித்தும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்க வலியுறுத்தியும் இந்து அமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததோடு, மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது, இருப்பினும் நேற்று நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்து அமைப்பினர் போராட்டத்தை நடத்தினர்.
இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “1931 லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பின்படி முழு மலையும் முருகனுக்கு சொந்தம். அதனால அதை யாரும் பங்கு போட அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்கள் இந்துக்களோட சகோதரத்துவமா இருக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன், அதுக்கு ஒரே வழி இருக்கிறது. எப்படி ராமஜன் பூமி கோவில் வேற இடத்திற்கு மாற்றினார்களோ, அதைப்போல இந்த தர்காவை நீங்க வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது இந்துவும் முஸ்லிமும் சகோதரமா வாழலாம் என்றார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்.. தாலிபன் திமுக அரசு.. கோபத்தில் கொந்தளித்த எச். ராஜா..!
தொடர்ந்து பேசிய அவர், இந்த சிக்கந்தர்ங்கிற நபர் எதுக்கு அந்த மலைக்கு போனார்? அங்கு எந்த குடியிருப்பும் கிடையாது. அங்க இருக்கிறது காசி விஸ்வநாதர் கோவில், நீ எதுக்கு போன?. கிராம மக்கள் சொல்றாங்க வந்து இவர் அந்த கோவிலை இடிக்கப் போனார். அதனால முருக பக்தர்களால் தாக்கப்பட்டார்ன்னு. சட்டத்திற்கு விரோதமானவர்கள் அரசியல் சட்டத்தின் எதிரியாக தமிழக காவல்துறை செயல்பட்டு இருக்கிறது?. நேற்று 144 இருந்தத போது அமைச்சர் மூர்த்தி ஊர்வலமா போய் அண்ணா சிலைக்கு மாலை போடலாமா?, முருக பக்தர்கள் ஒன்று கூட கூடாதா? என அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
இந்த உதயநிதி ஸ்டாலின் ஐ அம் எ பிரவுட் கிறிஸ்டியன்னு அறிவிச்சிருக்கார். திருப்பரங்குன்றத்தை கூறு போட நினைக்கும் இந்து விரோத, தமிழர் விரோத, தீய சக்திகளின் ஒரு ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே இந்த திராவிட முன்னேற்றக் கழக இந்து விரோத தலிபானிய அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, இந்துக்களுக்கு சம உரிமையோடு தமிழகத்தில் வாழ முடியாது என்கின்ற நிலையை கடந்த இரண்டு நாட்களான நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக் காட்டி இருக்கின்றன என்றார்.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த எச்.ராஜா... சுற்றி வளைத்த போலீஸ் பட்டாளம்... காரைக்குடி எஸ்.பி.யுடன் வாக்குவாதம்!