×
 

பாஜகவின் பாசம்..! கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி.. ராகுல் காந்தி விளாசல்..!

மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதனால்தான் வங்கிகள் பெரிய சிக்கலில் உள்ளன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சேர்ந்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் சந்தித்த அனுபவங்கள், அனுபவித்த வேதனைகள், கட்டாயமான பணியாடமாற்றம், சட்டத்துக்கு முரணான செயல்களை செய்ய வற்புறுத்தியதை சுட்டிக்காட்டினர். இந்த விவகாரம் ஐசிஐசிஐ ஊழியர்களுக்கு மட்டுமல்ல வங்கித்துறையில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இருக்கிறது என்று தெரிவித்தனர்.  

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கோடீஸ்வர நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஒட்டுண்ணி முதலாளித்துவம், தவறானமேலாண்மை ஆகியவை சேர்ந்து, வங்கித்துறையை பெரிய சிக்கலுக்கு கொண்டு சேர்த்துள்ளன.

இதையும் படிங்க: திமுகவோட அரசியல் நாடகத்தை இனி நம்ப மாட்டாங்க.. லெப்ட் ரைட் வாங்கிய அண்ணாமலை..!

இந்த விளைவால் வங்கியில் பணியாற்றும் ஜூனியர் அளவிலான பணியாளர்கள் அதிகமான வேலைப்பளுவுக்கும்,நச்சுமிகுந்த சூழலுக்கும் ஆளாகிறார்கள். ஐசிஐசிஐ வங்கி ஊழியர்கள் கதை மிகவும் வேதனையாக இருக்கிறது. வேலையிடத்தில் கடும் மனஉளைச்சல், கட்டாயாமான இடமாற்றம், என்பிஏ சார்ந்தவர்களுக்கு விதிகளை மீறி கடன் வழங்குவது, வேலையிலிருந்து நீக்கம் ஆகியவை நடந்துள்ளன. இதனால் பலர் தற்கொலை செய்துள்ளனர்.

பாஜக நிதித்துறையை மோசமாகக் கையாள்கிறது. பொருளாதார மேலாண்மைக்கு மனிதர்கள் பலியாகிளார்கள். தேசத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் வங்கித்துறையில் நிலவும் இந்த பிரச்சினையை உடனடியாக அரசு கவனிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி விரைவில் கையில் எடுத்து, வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவும், பணியிடத்தில் தொந்தரவுக்கு தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ராகுல் காந்தி ஏப்ரல் 7ம் தேதி பீகார் மாநிலத்துக்கு செல்கிறார். பாட்னா நகரில் நடக்கும் சம்விதான் சுரக்ஸா சம்மேளன் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு முடித்தபின் காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமாரின் நவுகாரி து யாத்ராவிலும் ராகுல் காந்தி பங்கேற்பார்.

இதையும் படிங்க: அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்? நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் அவசர சந்திப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share