×
 

கற்பனை உலகில் வாழ்கிறார் முதல்வர்.. வாராந்திர டிராமாவை நிறுத்துங்க.. எகிறி அடித்த அண்ணாமலை.!!.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாராந்திர நாடகத்தை நிறுத்திவிட்டு, சீர்குலைந்து கிடக்கும் ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாராந்திர நாடகத்தை நிறுத்திவிட்டு, சீர்குலைந்து கிடக்கும் ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக  அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார். தமிழக மக்கள் தனது ஆட்சிக்கு பாராட்டு மழை பொழிகிறார்கள் என்று நம்புகிறார். வரி பணம் தவறாகப் பயன்படுத்தி வீணடிக்கப்படுகிறது. மத்திய-மாநில உறவுகளை மறுபரிசீலனை செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை அமைக்கும் தீர்மானத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றி உள்ளார்.



2021ஆம் ஆண்டு முதல் திமுக அமைத்த பல குழுக்களில் இதுவும் ஒன்று. தமிழக அரசு வரி பணத்தை வீணடிக்கும் முன்பு, கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தக் குழுக்களுக்கு எவ்வளவு செலவிட்டுள்ளது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை என்ன என்பதை முதலில் அரசு அறிவிக்க வேண்டும். சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு தனது கட்சியினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான காந்திசெல்வன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார் என்பதை அவர் முதலில் தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும்.

2013ஆம் ஆண்டு திமுக - காங்கிரஸ் அரசுதான் நீட் தேர்வை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தது. 2017ஆம் ஆண்டு நீட் தேர்வை மறுசீரமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது யார் என்பது முதல்வருக்கு நன்றாகத் தெரியும். மேலும், 2014ஆம் ஆண்டுக்குள் எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் தவித்தனர் என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில், 1969ஆம் ஆண்டில் மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தார். இக்குழு, 1971ம் ஆண்டு மே மாதம், தமிழக அரசுக்கு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. ராஜமன்னார் கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று, மாநிலத்திற்கான மத்திய வரிப் பங்கை அதிகரிப்பது ஆகும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பெரிய அளவில் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி அதை செயல்படுத்தினார்.

2004ஆம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மத்திய அரசு தமிழகத்திற்கு ₹1,52,902 கோடி நிதி வழங்கியது. கடந்த 11 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இது ரூ.6,21,938 கோடியாக அதிகரித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த வாராந்திர நாடகத்தை நிறுத்திவிட்டு, சீர்குலைந்து கிடக்கும் ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் மனதார விரும்புகிறோம்." என்று அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பல்கலை. வேந்தர் ஆளுநர்.. துணைவேந்தர்களை நியமிக்க முடியாதா.? பாலகுருசாமி காட்டம்!

இதையும் படிங்க: பிஞ்சுகள் மனதில் வன்முறை..! அரிவாள் வெட்டு சம்பவத்தில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share