×
 

குஷியோ குஷி… இந்திய எம்.பி.க்களின் சம்பளம் 24% உயர்வு: இன்னபிற இத்யாதிகளும் அதிகரிப்பு..!

அடிப்படை சம்பளத்திற்கு மேல், எம்.பி.க்கள் தற்போது தொகுதி சலுகையாக ரூ.70,000, அலுவலக செலவுகளுக்கு ரூ.60,000 பெறுகின்றனர். இவற்றில் விகிதாசார உயர்வும் உள்ளது.

நாடாளுமன்ற விவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பால் எம்.பிக்கள் குஷியாகி உள்ளனர். இந்த உயர்வு ஏப்ரல் 1, 2023 -ல் முதல் கணக்கிட்டு அமலுக்கு வரும் வகையில் எம்.பிக்களுக்கான சம்பளம், டி.ஏ, ஓய்வூதியங்களை மத்திய அரசு  உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தத் திருத்தம், வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் செலவு பணவீக்கக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான மாதாந்திர சம்பளம் 24% அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி படிகள்,  ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றம் போது எம்.பிகளுக்கு கூடுதல் கூடுதல் செலவுக்காக வழங்கப்படுகிறது.

முன்னாள் எம்.பி.க்களுக்கு, ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.25,000 லிருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாட்டின் உயிர்நாடி ரயில்வே துறை வெண்டிலேட்டரில் உள்ளது.. காங்கிரஸ் விமர்சனம்..!

இந்த நடவடிக்கை, 2018 இல் திருத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954 ஆல் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பணவீக்கக்குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது.

அடிப்படை சம்பளத்திற்கு மேல், எம்.பி.க்கள் தற்போது தொகுதி சலுகையாக ரூ.70,000, அலுவலக செலவுகளுக்கு ரூ.60,000 பெறுகின்றனர். இவற்றில் விகிதாசார உயர்வும் உள்ளது. ஆண்டுதோறும் 34 இலவச உள்நாட்டு விமானங்கள், முதல் வகுப்பு ரயில் பயணம், டெல்லியில் இலவச வீடு போன்ற சலுகைகளும் இதனுடன் அடங்கும். அதிகரித்து வரும் செலவுகளை நிவர்த்தி செய்வதோடு, எம்.பி.க்கள் சிறப்பாக செயல்படும் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த சம்பளம், பயணப்படிகள், சலுகைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

 

இந்த சம்பள உயர்வுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி ள்ளது. சிலர் பணவீக்கத்தின் மத்தியில் இது தாமதமானது முடிவு என்று பாராட்டுகிறார்கள், மற்றவர்கள் பொருளாதார மீட்பு முயற்சிகளின் போது இந்த உயர்வு தேவைதானா? என கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படிங்க: மோடி prime minister இல்ல! Picnic minister - மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share