தம்பி இந்தா பார்த்துக்கோ....வன்னி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெயக்குமார்...
முதல்வரை சந்தித்த திருமாவளவன் உதயநிதி இடையே நாற்காலி இருந்ததை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியதை அடுத்து சில கேள்விகள் வைத்து கிண்டலடித்ததை அடுத்து ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக கூட்டணிக்குள் விசிக இணைந்தப்பின் பல சிக்கல்கள் வந்தாலும் அனைத்தையும் திருமாவளவன் தன்னுடைய அனுபவம் மற்றும் பொறுமையான அணுகுமுறை மூலமாக கூட்டணியை காப்பாற்றி வருகிறார். 2016 ஆம் ஆண்டு நாங்கள் 200 தொகுதிகள் நிற்கப்போகிறோம் நீங்கள் உங்கள் வழியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஸ்டாலின் சொன்னதாக திருமாவளவனே ஒருமுறை கூறியிருந்தார்.
2018 க்குப்பிறகு தொடர்ச்சியாக விசிக திமுக கூட்டணியில் இருந்தாலும் தொடர்ந்து சிக்கலை அனுபவித்து வருகிறது. இதில் கூட்டணி தர்மத்தை காப்பாற்ற வேங்கைவயல், இ.கருணாநிதி மருமகள் வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிர்ச்சனைகளில் அட்ஜஸ்ட் செய்து போகும் நிலை. அதேபோல் தனது கட்சிக்காரர்களே திமுக தொண்டர்களை மிஞ்சிய திமுக விசுவாசிகளாக மாறியதையும் சகித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: “அண்ணன் ஜெயக்குமார்... தம்பி வன்னியரசு...” - சோசியல் மீடியாவில் தூள் பறக்கும் அதிமுக Vs விசிக விவாதம்...!
இதில் உச்சபட்ச விஷயமாக கூட்டணிக்குள் குண்டு வைக்கும் வேலையை ஆதவ் அர்ஜுனா செய்தபோது பெரியண்ணன்கள் கோபத்திலிருந்து கட்சியை காப்பாற்ற ஆதவ்வை வெளியே அனுப்பினார். இப்படிப்பட்ட நிலையில் பலவிதமாக அட்ஜஸ்ட் செய்து திருமாவளவன் கட்சியை நடத்தி வரும் வேளையில் திடீரென ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டப்பின் முதலவரை சந்தித்தார். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருந்தார். அந்த புகைப்படம் வந்தபோது அதில் திருமாவளவன், உதயநிதி இடையே ஒரு நாற்காலி இடைவெளி இருப்பதை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஏன் இந்த இடைவெளி என புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதைப்பார்த்து கடுப்பான விசிக துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு ”மதிப்புமிகு அண்ணன் டி.ஜெயக்குமார் அவர்களே நீங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர் முன் என்றைக்காவது இப்படி சமமாக அமர்ந்ததுண்டா? அதுவெல்லாம் ஒரு ‘கார்’காலம்.
இன்றைய தலைவர் எடப்பாடியார் அவர்களோ அல்லது நீங்களோ இப்படி சமமாக அமர்ந்த புகைப்படங்களை பகிரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”. என்று பதிவிட்டிருந்தார். அதில் ஜெயலலிதா கார் முன் அனைவரும் குனிந்தப்படி நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்திருதார்.
இதற்கு பதிலளித்த ஜெயக்குமார் ”அன்பகற்கினிய தம்பி வன்னியரசு அவர்களே... இதோ நீங்கள் கேட்ட புகைப்படங்கள்! திருமாவளவனின் அரசியல் அனுபவத்திலும்-பொதுவாழ்வால் அவருக்கு வந்த நெருக்கடிகளிலும் சிறிய பகுதியை கூட தன் வாழ்வில் உதயநிதி பார்த்திருக்க மாட்டார்.
கல்லூரி காலம் முதல் திருமாவளவனை பார்த்தவன் என்ற முறையில் இந்த கேள்வியை எழுப்பினேன். விடுதலை சிறுத்தைகளே விரும்பாத செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வரும் திமுக அரசை நோக்கி உங்கள் கேள்வி எழுப்புங்கள். அதை தான் உங்கள் தொண்டர்களும் விரும்புவார்கள். மாறாக உதயநிதி போன்ற மன்னர் பரம்பரையின் வாரிசிற்காக எங்களை நோக்கி வசை பாட வேண்டாம்” என பதிலளித்து அவர் பதவி ஏற்கும்போது ஜெயலலிதா நிற்கும் படத்தையும், எடப்பாடி பழனிசாமியுடன் அமர்ந்திருக்கும் படத்தையும் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கீழே நெட்டிசன்கள் ஆதரவு எதிர்ப்பாக பதிவிட்டு வருகின்றனர். இதற்கு வன்னி அரசு பதிலளிக்கவில்லை என்பது இன்னும் சிறப்பு.
இதையும் படிங்க: காங்கிரஸூம் ஆம் ஆத்மியும் ஒன்னா சேர்ந்திருந்தா இப்படி நடந்திருக்குமா..? டெல்லி தேர்தல் முடிவால் நொந்துபோன திருமாவளவன்.!