மனைவி மற்றும் மகளை கொன்ற சகோதரர்கள்.. குழம்பிய போலீஸ் ஸ்கெட்ச் போட்டு தூக்கியது எப்படி..?
கொல்கத்தாவில் சகோதரர்கள் இருவர் அவர்களது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த சகோதரர்களான பிரணியன், பிரசுண் டே பிசினஸ் செய்து வந்துள்ளனர். இந்த தொழிலில் இவர்களது மனைவிகளும் பங்கேற்று பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி திடீரென சகோதரர்களான பிரணியன் மற்றும் பிரசுண் டே கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அதில் இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிவித்தனர். முதலில் இதனை நம்பிய காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்திய இருவரும் மற்றொரு குற்றத்தை திசை திருப்புவதற்காக தற்கொலை என்னும் நாடகத்தை கையில் எடுத்தது தெரிய வந்தது.
முன்னதாக இவர்களது பூர்வீக வீட்டில், விசாரணை மேற்கொண்ட போலீசார் சகோதரர்களான பிரணியன் மற்றும் பிரசுண்டே ஆகியோரின் மனைவிகள் மனைவிகள் மற்றும் அவரது மகளின் உடல்களை கைப்பற்றியுள்ளனர்.இந்த சம்பவம் இரு சகோதரர்கள் மீது சந்தேகத்தை வலுப்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையை மீண்டும் துரிதப்படுத்தினர். இந்நிலையில் போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி குரு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மூவரின் உடல்களிலும் வெட்டு காயங்களும் மணிக்கட்டில் உடைக்கப்படும் மிதிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகம் வலுப்பெற்ற நிலையில் தான் பிரனியனின் மகன் காவல்துறைக்கு துப்பு சீட்டாக கிடைக்கப்பெற்றார்.
இதையும் படிங்க: இரு இளைஞர்கள் புதைக்கப்பட்ட கொடூரம்.. விசாரணை தீவிர படுத்திய போலீசார்
முன்னதாக பிரணியனின் மகன் காவல்துறையிடம் தனது தாய் மற்றும் அத்தை சகோதரியாகிய மூவரையும் கொலை செய்தது அவரது மாமா தான் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் சகோதரர்கள் இருவரையும் கைது செய்த விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து கொல்கத்தா கமிஷனர் மனோஜ் வர்மா கூறுகையில், மூவரின் உயிர் இழப்பில் வெளி தொடர்பு ஏதும் இல்லை என்றும், கொலையின் முக்கிய காரணம் அவர்கள் தொழில் தொடர்பான பிரச்சனை தான் என போலீசார் உறுதியளித்தனர்.
மேலும் உடற்கூறு ஆய்வின் அறிக்கையில் இரண்டு பெண்களின் மணிக்கட்டிலும் வெட்டு காயங்களும், கழுத்தில் ஆழமான கத்தி குத்துகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பெண்கள் உயிரோடு இருக்கும் போதை நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி சிறுமிக்கு விஷம் கொடுத்ததால் உயிரிழந்திருக்கலாம் என உடற்குறைவில் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து பேசிய கமிஷனர் சகோதரர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், குற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு கூடுதல் நிபுணர்களின் அறிக்கையை பெற வேண்டி உள்ளதானால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மச்சான் என்றதற்கு கொலை செய்த விவகாரம்.. தலையில் கல்லைப் போட்டவருக்கு ஆயுள் தண்டனை..