புதிய விமான நிலையம்... எதிர்பார்க்காத அறிவிப்பு தந்த பட்ஜெட்!!
தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை அறிவித்தார். முன்னதாக தமிழுக்கும், கல்வித்துறைக்கும் பட்ஜெட்டை அறிவித்த அமைச்சர் அடுத்ததாக தொழில்த்துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், இலங்கை செல்லும் பயணிகளும் பலனடைவர்.
இதுமட்டுமில்லாமல், தொழிதுறையில் 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கபடும் என்றும், ரூ .100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்காக தான் பட்ஜெட்... கல்விக்காக ரூ.46,767 கோடி ஒதுக்கீடு!!
மருத்துவத்துறையில் ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மகளிர் உரிமை தொகை பெறாதவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்திற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில்துறையை மேம்படுத்த ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கமும், ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா அமைத்து 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே தொழில் பூங்காக்கல் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைப்பதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பட உள்ளது. இதற்கெல்லாம் மேல் விண்வெளி பயணத்தின் தொழில்நுட்பத்திற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2025... இதெல்லாம் கவனிச்சீங்களா..?