×
 

இவ்ளோ சிக்கனமா? சொந்தவீடு வாங்க டாய்லெட்டில் குடியிருக்கும் சீன பெண்…

சீனாவில் சொந்த வீடு வாங்குவதற்காக 18 வயது இளம் பெண் தன் பணி புரியும் இடத்தின் கழிவறையிலேயே தங்கும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய செய்கின்றது.

சொந்த வீடு வாங்குவது பலரின் வாழ்நாள் லட்சியமாக இருக்கிறது. இந்த கனவை சிலர் கஷ்டப்பட்டு பணத்தை சேமித்து வாங்கி விடுகின்றனர். இன்னும் சிலர் வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கி வருகின்றனர். முதலீட்டுக்குத் தேவையான தொகையைத் திட்டமிட்டு, அதற்கேற்ப சேமித்து சொந்த வீடு கனவை நாம் அடைய விரும்புவோம். அதிலும் திருமண வயதை எட்டுவதற்குள் ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது பலரின் லட்சியமாக இருக்கும். அப்படியாக சீனாவை சேர்ந்த 18 வயது இளம் பெண் சொந்தவீடு வாங்கவேண்டும் என்பதற்காக சிக்கனத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

சீனாவில் யாங் என்ற 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையிலேயே வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். அதிகரித்து வரும் வாடகை செலவுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார் எடுத்துள்ளார் யாங்.

இதையும் படிங்க: 50 ஆண்டுகால மாஸ்டர் பிளான்... சீனாவை நச்சரிக்கும் வங்கதேசம்: இந்தியா கடும் ஆத்திரம்..!

மாதம் ரூ.34,570 சம்பளமாக பெறும் யாங் வாடகையாக தற்போது ரூ.545 மட்டுமே செலுத்துகிறார். குளிப்பது, சமைப்பது, துணிகளை துவைப்பது, உறங்குவது என அனைத்து வேலைகளையும் அந்த சிறிய இடத்திலேயே அவர் செய்து கொள்வதாக தெரிகிறது. பணிநேரங்களில் மற்ற அனைவரும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தனது உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றி விடுவாராம் யாங்.

ஆரம்பத்தில், யாங் மாதத்திற்கு ரூ. 2,290 வாடகை செலுத்த முன்வந்த போது, அவரது முதலாளி அதற்கு மறுத்துவிட்டதாக தெரிகிறது. தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் தற்போது வசூலித்து வருகிறார். கதவு இல்லாததால் சங்கடமாக உணர்ந்த யாங், கதவில் துணியை தொங்கவிட்டு, தனது வீடாக நினைத்து கொள்கிறார்.

இரவில் மடிப்பு படுக்கையை உபயோகிக்கும் அவர்,. தனது ரூ.34,570 மாத சம்பளத்தில் தனது செலவை வெறும் ரூ. 4,500 ஆகக் குறைத்து, சொந்தவீடு வாங்க வேண்டும் என்பதற்காக கடும் சிக்கனத்துடன் வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: வலியால் துடித்த தாய்..! வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share