×
 

வசதியானவர்களை நோட்டமிடும் ரேபிட்டோ, ஓலா, ஊபர்... ஆப்ஸ் மூலம் பயணிகளுக்கு ஆப்பு... அதிர வைக்கும் கொள்ளை..!

முன்பதிவு செய்யும் நேரம் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் வண்டிக்கான தேவை ஆகியவற்றைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடலாம்

ரேபிட்டோ, ஓலா, ஊபர் போன்ற ஆப்களின் பயணத்திற்கு புக் செய்யும்போது, அதனை கேன்சல் செய்து விட்டு மீண்டும் புக் செய்தால் கட்டணம் அதிகரித்து காட்டப்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக  ஐபோன் பயன்படுத்துபவர்களிடம் இருந்து கட்டணம் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஆன்லைன் கேப் பயன்படுத்துவோர் அதிக அளவில் புகார் அளித்துள்ளனர். ஆண்ட்ராய்டு, ஐபோன் பயன்படுத்துவோர் இருவரும் ஒரே தூரம், சேருமிடத்திற்கு வண்டியை முன்பதிவு செய்தாலும், ஆண்ட்ராய்டு போன்களில் கட்டணம் குறைவாகக் காட்டப்படுவதாக கூறுகிறார்கள்.

ஆண்ட்ராய்டு போன்களில் மடிப்பாக்கத்திலிருந்து பீனிக்ஸ் மாலுக்கு கட்டணம் ரூ.196 காட்டினால் ஐபோனில் இதற்கு ரூ.260 வசூலிக்கப்படுகிறது. தி-நகரில் இருந்து எழும்பூருக்கு கட்டணம் ஆண்ட்ராய்டில் ரூ.180 ஆகவும், ஐபோனில் பில் ரூ.344 ஆகவும் காட்டுகிறது.

இதையும் படிங்க: தண்ணியில கண்டம்... பிரம்மபுத்ரா நதியில் சீனா கட்டும் வல்லரசு அணை... இந்தியாவை அழிக்க இப்படியொரு சதியா..?

பயனர்களின் பதிவுகளின் அடிப்படையில் கேப் நிறுவனங்கள் இதுபோன்ற கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, சென்னையை சேர்ந்த ரைடு-ஹெய்லிங் பிளாட்ஃபார்ம் ஃபாஸ்ட்ராக்கின் நிர்வாக இயக்குனர் அம்பிகபதி கூறுகையில், ‘‘கேப் நிறுவனங்களின் தலைமை சேவையகம் பயனர்களின் மொபைல் போன்களின் அடிப்படையில் கட்டண மதிப்பீடுகளை எளிதாக உருவாக்க முடியும். டைனமிக் ப்ரைசிங் அல்காரிதம் என்ற போர்வையில் கட்டணங்களைக் கையாள்வது நிறுவனங்களின் குழந்தைத் தனமா விளையாட்டு. நிறுவனங்கள் பயனர்களின் வசதியை கண்டறிந்து கட்டணத்தை உயர்த்துகின்றன’’என்கிறார்.

திருவனந்தபுரத்தில் உள்ள சி-டேக் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் ரவிக்குமார் கூறுகையில், ‘‘கட்டணங்களை நிர்ணயம் செய்ய பயன்படுத்தப்படும் அல்காரிதம்கள் கிளவுட் ஏஐ போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆப் அக்ரிகேட்டர்களால் பயன்படுத்தப்படுகின்றன. கேப் வழங்கும் பயன்பாடுகள் பயனர்களை அடையாளம் காண முடியும். பயன்படுத்துபவர் வழக்கமான வாடிக்கையாளர் என்று தெரிந்ததும், கட்டணத்தை உயர்த்துகிறார்கள்.

வாடகை விகிதங்கள் குறையும் வரை பயனர்கள் காத்திருக்க மாட்டார்கள் என்பது நிறுவனங்களுக்குத் தெரியும். ஒரே மொபைலில் மீண்டும் மீண்டும் கட்டணங்களைச் சரிபார்ப்பவர்களுக்கும் இந்த சூத்திரம் பொருந்தும். இந்த கட்டண வேறுபாட்டிற்கு உறுதியான ஆதாரம் இல்லை. அதை வெளிப்படையாக நிரூபிக்க முடியாது. ஒரு நாளுக்குள் ஒரே இடத்திற்கு செல்ல தேடும்போது வெவ்வேறு கட்டணத்தைக் காட்டும்.

இதுகுறித்து டிராவல் ஆப் நிறுவனமான உபர் நிறுவனம் கூறுகையில்,  ‘‘பயணிகளின் தொலைபேசியை வைத்து கட்டணத்தை நிர்ணயிக்கும் கொள்கை நிறுவனத்திடம் இல்லை. மதிப்பிடப்பட்ட தூரம், முன்பதிவு செய்யும் நேரம் மற்றும் குறிப்பிட்ட பகுதியில் வண்டிக்கான தேவை ஆகியவற்றைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடலாம்’’ என இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதற்கு ஓலா நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.  

‘‘ஆப்ஸை டவுண்லோடு செய்ய அனுமதிகள் தேவைப்படும் போது, பயன்பாட்டின் ஹார்டுவேர் தொலைபேசியின் தரவை எப்படி அணுகுகிறது என்பதில் சிக்கல் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ட்ராவல் ஆப் நிறுவனங்கள் தங்கள் வாடகை டாரிப்பை பற்றி மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனால் பயனர்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை’’ என்கிறார் ரவிக்குமார் கூறினார்.

இதுதான் போகிற போக்கில் கொள்ளையா?

இதையும் படிங்க: டேமேஜ் ஆன இமேஜ்... தாய்க்குலத்தின் காலில் விழுந்து கறையைத் துடைத்து கொண்ட எம்.எல்.ஏ..! அசர வைத்த அருள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share