×
 

மனிதர்கள் இருப்பதை கண்டறிந்த நாய்கள்..! தெலுங்கானா சுரங்க விபத்தில் ட்விஸ்ட் 

மனிதர்கள் உயிருடன் இருப்பதை கண்டறிந்த நாய்கள்..! தெலுங்கானா சுரங்க விபத்தில் ட்விஸ்ட் 

தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி) சுரங்கத்தில், பகுதியளவு இடிந்ததால் காணாமல் போன எட்டு பேரை தேடும் 15 நாள் மீட்பு நடவடிக்கையில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

மூன்று நாட்களுக்கு முன் கேரளாவிலிருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்ட, பயிற்சி பெற்ற பெல்ஜியன் மாலினாய்ஸ் இன நாய்கள், சுரங்கத்தில் புதைந்திருக்கும் மனிதர்களை கண்டுபிடித்துள்ளன .  
இந்த நாய்கள், 14 கி.மீ நீளமுள்ள சுரங்கத்தின் இறுதி பகுதியில், விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலுள்ள டி-2 புள்ளியில் மனித இருப்பை கண்டறிந்தன.

 மீட்பு பணியாளர்கள் அந்த இடத்தில் இடிபாடுகளை கவனமாக அகற்றி வருகின்றனர். இன்று மாலைக்குள் சிலரை கண்டுபிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..

 சனிக்கிழமை இரவு, ஆறு அடி ஆழத்தில் புழுதிக்குள் மனித உடல் பாகங்கள் கிடைத்ததாகவும், உடலை மீட்க அகழ்வு பணி நடப்பதாகவும் ஐஏஎன்எஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.  
கடந்த பிப்ரவரி 22 அன்று, சுரங்க அகழ்வின் போது கூரை இடிந்ததால், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள், இரண்டு பொறியாளர்கள், இரண்டு இயந்திர இயக்குநர்கள் சிக்கினர். தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்), இந்திய ராணுவம், கடற்படை, மாநில பேரிடர் மீட்பு படை (எஸ்டிஆர்எஃப்) உள்ளிட்ட அமைப்புகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.  

மார்ச் 2 அன்று முதலமைச்சர்  ரேவந்த் ரெட்டி சுரங்கத்தை பார்வையிட்ட பின், சனிக்கிழமை மீட்பு பணிக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. தெலுங்கானா பாசன அமைச்சர் என். உத்தம் குமார் ரெட்டி, கேமராக்கள், அகச்சிவப்பு சென்சார்கள் மற்றும் ரோபோ கைகள் பொருத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார். இந்த வசதிகளை பயன்படுத்தி  13.95 கி.மீ வரை மீட்பு குழுக்கள் முன்னேறியுள்ளனர், ஆனால் கடைசி 50 மீட்டர் பகுதி ஆக்ஸிஜன் குறைபாடு, நீர் ஊடுருவல் மற்றும் சுரங்க அகழி இயந்திர (டிபிஎம்) இடிபாடுகளால் நிலையற்றதாக உள்ளது.  

நீர் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்கின்றன. உலகளாவிய சுரங்க நிபுணர்களுடன் ஆலோசித்து, 525 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, ரோபோ அமைப்புகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: கார்டு மேல இருக்குற நம்பர் போலோ.. அமெரிக்க வாழ் இந்தியர்களையும் விட்டு வைக்கல.. சைபர் கிரைமில் ஈடுபட்ட 62 பேர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share