×
 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா...

கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு, நாட்டுக்குள் அதிகரித்த பணத்தட்டுப்பாடு, அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்க உள்ளது என பல விஷயங்கள் அவர் பதவி விலக காரணமாக அமைந்துவிட்டன.

முடியாட்சி நடைபெறும் நாடுகளுள் கனடாவும் ஒன்று. இன்றளவும் அதன் மன்னராக இங்கிலாந்து அரசர் சார்லஸ் உள்ளார். அந்நாட்டின் பிரதமராக 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது தந்தை பியர்ரே ட்ரூடோவும் கனடாவின் பிரதமராக இருந்தவர் தான். 1971-ல் பிறந்த ட்ரூடோ பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் ஆசிரியராக பணியைத் தொடங்கினார். 

2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று கனடா நாடாளுமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார். 2013 லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2015-ம் ஆண்டு தேர்தலில் அபார வெற்றி பெற்று கனடாவின் இளவயது பிரதமராக அரியணையில் அமர்ந்தார். 

இதையும் படிங்க: ஜாதி அரசியலின் பெயரால் அமைதியை சீர்குலைக்க முயற்சி: பிரதமர் மோடி கடும் தாக்கு  

பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார் ட்ரூடோ. குறிப்பாக குடியேற்றக் கொள்கை அவருக்கு பல்வேறு அரசியல் எதிரிகளை தேடி தந்தது. பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதித்ததும் லிபரல் கட்சிக்கான செல்வாக்கை சமூகத்தில் குறைத்தது. அவற்றைத் தாண்டி தனது முதலாவது ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார் ட்ரூடோ. தனது அமைச்சரவையை கட்டுக்குள் கொண்டு வர தவறியதாக அவர் மீது அப்போது விமர்சனங்கள் எழுந்தன. 

அதேபோன்று 2019-ம் ஆண்டு உலகை உலுக்கிய கோவிட் பெருந்தொற்றில் அதிகம் பாதித்த நாடுகளில் கனடாவும் ஒன்று. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய பல்வேறு கடன் திட்டங்களை அவர் ரத்து செய்தார். சரிந்து கிடந்த செல்வாக்கை ஓரளவு அது சரிசெய்ய உதவியது எனலாம். ஆனால் 2019-ல் நடைபெற்ற தேர்தலில் அவரால் மைனாரிட்டை அரசையே அமைக்க முடிந்தது. நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து 2021-ல் தேர்தலை எதிர்கொண்டார். அப்போது மைனாரிட்டே அரசே அவருக்கு வாய்த்தது.

ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக களமாடியது, ஆப்கானிஸ்தானில் கனேடிய துருப்புகளை நிலைநிறுத்தியது, அமெரிக்க தேர்தலில் கனடாவின் நிலைப்பாட்டை அறிவித்தது, காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டது என அடுத்தடுத்து சரிவை சந்தித்தார் ட்ரூடோ.

சமீபத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் அவர் பிரதமர் பதவியில் நீடிப்பதை பெரும்பாலானோர் விரும்பவில்லை என முடிவுகள் வெளியாகின. இதையடுத்து நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கனடா நாட்டு மக்களுக்கு தன்னால் நல்ல பிரதமராக செயல்பட முடியவில்லை என்றும், கனடா அரசியல் மாற்றத்தை சந்திக்க வேண்டிய நேரம் என்றும் கூறினார். 

வருகிற மார்ச் மாதம் வரை கனடாவின் பிரதமர் பொறுப்பில் அவர் செயல்படுவார். அதன்பிறகு நடைபெறும் தேர்தலில் கனடாவின் புதிய பிரதமர் யார் என்பது தெரியவரும். பழமைவாத கட்சியின் பொய்லிவரே புதிய பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை... பதவியேற்கப்போகும் முன் நீதிமன்றம் வைத்த செக்..! கதறும் ட்ரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share