×
 

மகன் திருமணத்தை வைத்து எஸ்.பி.வேலுமணிக்கு நெட்டு கட்டிய திமுக... பாய்ந்தது அதிரடி வழக்கு...! 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருமண வரவேற்பு விழா அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தாக பீளமேடு போலீசார் 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருமண வரவேற்பு விழா அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தாக பீளமேடு போலீசார் 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கோவை அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி மகன் விஜய் விகாஸ் - தீக்‌ஷனா திருமணம்  கடந்த வாரம்  கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். 

இதையும் படிங்க: திருவள்ளூரில் சந்திக்கிறேன்! திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு..!

இதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் கோவை கொடிசியாவில் நடைபெற்றது. 
இதில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றும், திருமணமான புதுமண தம்பதியை வாழ்த்தியும் வழிநெடுகிலும் பேனர்கள் மற்றும் பதாகைகளை அதிமுக நிர்வாகிகள் வைத்திருந்தனர். 

இந்நிலையில் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் போக்குவரத்திற்கும்,  பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ரெசிடென்சியிலிருந்து கொடிசியா வளாகம் வரை கட்சி கொடிகளையும் பேனர்களையும், வரவேற்பு பதாகைகளையும் அலங்கார வளைவுகளையும் வைத்து பொது மக்களுக்கு தொல்லையை ஏற்படுத்தி, பொதுமக்களின் உயிருக்கும் உடல் பாதுகாப்பிற்கும் அபாயம் விளைவித்ததாக  பீளமேடு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருவள்ளுரில் மத்திய அரசை கண்டித்து, துணை முதல்வர் உதயநிதி படத்துடன் வைக்கப்பட்ட 25 அடி உயர கட்அவுட் ஆட்டோ மீது சரிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்திய வீடியோ நேற்று முதல் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. திமுக கண்டன பொதுக்கூட்டத்திற்காக திமுக நிர்வாகிகள் வைத்த ராட்சத பேனர் விழுந்து ஒரு விபத்தே நிகழ்ந்துள்ளது. இதை கண்டும் காணாதது போல் கடந்து செல்லும் திமுக அரசு. திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிந்திருப்பது பழிவாங்கும் செயல் என அதிமுகவினர் சோசியல் மீடியாக்களில் கொந்தளித்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் திமுக..! சித்து, ஜெகனுடன் சந்திப்பு.. கடுப்பில் பிஜேபி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share