×
 

விஜய் கட்சியிலும் சாதி பஞ்சாயத்து... தவெக மாவட்டப் பொறுப்பாளர் மீது சாதிய வன்கொடுமை வழக்கு..!

ஏரலில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் ஒருவரை ஜாதி குறித்து தரக்குறைவாக பேசியதாக தவெக மாவட்டப் பொறுப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரலில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் ஒருவரை ஜாதி குறித்து தரக்குறைவாக பேசியதாக தவெக மாவட்டப் பொறுப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் வேம்பு மகன் பாலமுருகன். மாற்றுத் திறனாளியான இவர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கட்சிக்காரருக்காக ஏரல் காவல் நிலையத்தில் புகார் குறித்து விசாரணைக்காக பாலமுருகன் வருகை தந்தார். விசாரணைக்காக வந்த அவர் காவல்நிலையம் அருகே  உள்ள காந்தி சிலை பகுதியில் தனது மாற்றுத்திறனாளிக்கான வாகனத்தில் இருந்துள்ளார்.  அப்போது ஏரல் அம்பாள் தோப்பு பகுதியைச் சேர்ந்த  தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட பொறுப்பாளராக உள்ள வி.ஜி சரவணன் என்பவர் தன்னுடன் 6 பேரை அழைத்துக் கொண்டு பாலமுருகன் இருந்த இடத்திற்கு வந்துள்ளார். 

 

அங்கு வந்த அவர்கள் மாற்றுத்திறனாளி வழக்கறிஞரான பாலமுருகனை நீ வழக்கறிஞரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாற்றுத்திறனாளியான வழக்கறிஞர் பாலமுருகன் ஏரல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வி.ஜி சரவணன் மற்றும் அவருடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இனி தளபதி அல்ல... விஜய்க்கு புதிய பட்டப்பெயர் சூட்டிய ஆதவ் அர்ஜூனா..!


அதிமுகவில் பொறுப்பில் இருந்த வி.ஜி சரவணன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான்
தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குதல் இலவச வேஷ்டி சேலைகள் வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவருக்கு தவேக கட்சியில் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வழங்கிய நிலையில் அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

இதையும் படிங்க: தவெகவின் உலகமகா உருட்டு..! சைவ சோறு போட்டு பாஜகவின் 'பி' டீம் என்பதை உணர்த்தும் விஜய்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share