×
 

மத்திய அரசு ஊழியர்கள் இனி ‘ஜாலி’தான்! உற்சாக அறிவிப்பு வெளியிட்ட மோடி அரசு...

மத்திய அரசு ஊழியர்கள் எல்டிசி(LTC) மூலம் தேஜாஸ், வந்தே பாரத் மற்றும் ஹம்சபர் எஸ்க்பிரஸ் ரயில்களில் பயணிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பணியாளர் மற்றும் பயிறச்சித்துறை ஒப்புதலுக்குப்பின், இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
எல்டிசி திட்டத்தின் கீழ் பல்வேறு எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு ரயில்களை சேர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளும், பரிந்துரைகளும் மத்திய பணியாளர் மற்றும் பயிறச்சித்துறைக்கு தொடர்ந்து வந்தவாறு இருந்தன. இதையடுத்து, இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மத்திய மத்திய பணியாளர் மற்றும் பயிறச்சித்துறை வெளியிட்ட அறிவிப்பில் “ மத்திய செலவினத்துறையுடன் நடத்தப்பட்ட ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப்பின், மத்திய அரசு ஊழியர்கள் எல்டிசி திட்டத்தின் கீழ் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ மற்றும் தேஜாஸ் ரயில், வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்டிசி திட்டம் என்பது மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லவோ அல்லது இந்தியாவில் எந்த இடத்துக்கும் செல்லவோ, பணிநிமித்தமாகச் செல்லவோ வழங்கப்படும் சலுகையாகும். இந்த எல்டிசி திட்டத்தை மத்திய அரசு ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம், அல்லதுநாட்டில் எந்த இடத்துக்கும் செல்ல 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: மோடி அரசிடம் மன்னிப்புக் கேட்ட ஜூகர்பெர்க்: என்ன காரணம்?


இதன்படி, லெவல்12 அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் சதாப்தி மற்றும் அதற்கு ஈடான எக்ஸ்பிரஸ் ரயில்களில் எக்ஸ்கியூட்டிவ் வகுப்பிலும், ராஜ்தானி ரயில்களில் ஏசி முதல்வகுப்பிலும் பயணிக்கலாம்
லெவல்-6 முதல் 11 வரை இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் சதாப்தி ரயில்களில் சேர் கார் வகுப்பிலும், ராஜ்தானி ரயில்களில் ஏசி. 2ம் வகுப்பிலும் பயணிக்க முடியும். 
லெவல் 5 அதற்கு கீழ் பணியாற்றும் ஊழியர்கள் சதாப்தி ரயில்களில் சேர்கார் வகுப்பிலும், ராஜ்தானி ரயில்களில் ஏசி 3ம்வகுப்பிலும் பயணிக்க முடியும்.

இதையும் படிங்க: இந்தியா கூட்டணியை அழிக்கிறதா காங்கிரஸ்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share