பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்... வேகமெடுத்த நிலம் கையகப்படுத்தும் பணிகள்!!
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது.
சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றுதான் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம். இங்கு தினந்தோறும் பல லட்ச கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமானங்கள் செல்கின்றன. அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் வெகு விரைவில் அப்பகுதி மிகவும் நெரிசல் நிறைந்த பகுதியாக மாறிவிடும் என்பதோடு விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக சென்னைக்கு வெளியே மற்றொரு விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சொன்னதை செய்த திமுக.. வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மனு.!
பின்னர் தான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மீனம்பாக்கத்தில் இருந்து பரந்தூர் 70 கிமீ தொலையில் உள்ளது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. மேலும் இதற்கான நிலம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பரந்தூரில் உள்ள சென்னையின் இரண்டாவது கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்துக்கு மத்திய அரசு இறுதிக் கொள்கை ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விரைவில் கோரப்படவுள்ளது. 5,476 ஏக்கர் பரப்பளவில் ரூ.27,400 கோடி செலவில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் விரைவில் அங்கே நிலம் கையகப்படுத்தும் திட்டங்கள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து 2026-ம் ஆண்டு தொடங்கி 2028-ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வு… மக்களுக்கு அரசு தரும் மற்றொரு பரிசு… ராகுல்காந்தி தாக்கு!!