×
 

காங்கிரசால் தான் நக்சலிசம் வளர்ந்தது..! அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதமர்..!

காங்கிரஸ் கட்சியால் தான் நக்ஸலிசம் நாட்டில் வளர்ந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

சத்தீஸ்கர் சென்றுள்ள பிரதமர் மோடி பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹபத்தா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். அப்போது, 33 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், காங்கிரசின் கொள்கைகளால், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் நக்சலிசம் வளர்ந்ததாக கூறினார். வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் நக்சலிசம் செழித்தது என்றும், ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்கள் என அறிவித்து பொறுப்பிலிருந்து விலகிச் சென்றதாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: அடுத்த பாஜக தேசிய தலைவர் யார்..? நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை..!

இதனால் பல தாய்மார்கள் மகன்களை இழந்ததாகவும், பல சகோதரிகள் தங்களது சகோதரர்களை இழந்ததாகவும் குறிப்பிட்டார். முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்ததாக கூறிய அவர், காங்கிரஸ் அரசாங்கம் ஏழை பழங்குடியினரின் வசதிகளை ஒருபோதும் கவனித்துக் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும் பாஜக அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் காரணமாக நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதியின் புதிய சகாப்தம் ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸின் கொள்கைகளால் நக்சலிசம் அதிகரித்தது என்றும், ஆனால் பாஜக அரசு மக்களுக்காக வீடுகளை கட்டுவது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்தி வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் மீதான ஒடுக்குமுறைக்கு மத்தியில் பா.ஜ.க. அரசின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

முன்னதாக நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம் போன்றது என கூறினார். பாஜக தேசிய தலைவர் ஜே. பி நட்டாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில் அவரது தேசிய தலைவர் பதவியும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த பயணத்தின் போது மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையக் கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், யோகா மற்றும் ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய துறைகள் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்று வருவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு.. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share