‘அடடா மழைடா அடமழை டா’... இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான வானிலை தகவல்கள்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள விரிவான வானிலை தகவல்கள்.
கோடையின் தொடக்கமாக வெயில் கொளுத்தி வாங்கி வரும் நிலையில், அவ்வப்போது மழை பெய்து மண்ணையும், மக்களையும் குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் இன்று கூட நீலகிரி, கூடலூர், குன்னூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. தற்போது அதன் தொடர்ச்சியாக நாளை எங்கெல்லாம் மழை பெய்யும், எங்கெல்லாம் வெயில் வெளுத்து வாங்கும் என பார்க்கலாம்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 21ஆம் தேதி வரை மழை! கூல் அப்டேட் கொடுத்த வானிலை மையம்
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை (மார்ச் 23) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மார்ச் 25ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கிய மக்கள்.. மின்னல் தாக்கி பலியான சோகம்.. கள்ளக்குறிச்சியில் சோகம்..!