பள்ளிகளில் ஏஐ கட்டாயமாகிறது... சீனாவின் 20 ஆண்டு திட்டம்: 'மொழி' அரசியல் அரசுகளே உறைக்கிறதா..?
இந்தியாவியாவில் பின்னேற்ற மொழிக்கொள்கை.. சீனாவில் முன்னேற்ற கல்வி வழிக்கொள்கை..!
20 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இப்போதுதான் புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கத் தொடங்கியுள்ளது தொடக்கப் பள்ளிகளில் ஏஐ சிறப்புப் பாடத்தை கட்டாயமாக்கியுள்ளது.
சீனா தனது கல்வியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் இன்னும் குழப்பத்தில் இருக்கும் ஒரு மாற்றம்தான் ஆனால் சீனா துண் இந்து இறங்கி உள்ளது. சீனாவில் தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு படிப்பை கட்டாயமாக்கி உள்ளது. இந்தக் கல்விக் கொள்கை அடுத்த 20 ஆண்டுகளுக்கான அந்நாட்டின் முன் தயாரிப்பாகக் கருதப்படுகிறது.
சீனாவின் கல்வி முறையில் இந்த மாற்றம் இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும். இதன் கீழ், சீனாவில் உள்ள தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் செயற்கை நுண்ணறிவைப் படிக்க வேண்டும். இதனால் இந்த மாணவர்கள் எதிர்கால சவால்களுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும்.
இதையும் படிங்க: புது ரூட்டெடுத்த சீனா.. இந்தியாவுக்கு வளர்ச்சி..? அமெரிக்காவுக்கு சிக்கல்!!
சீனா ஏஐ கல்வியை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளது. இதில், ஆரம்ப கட்டத்தில், அதாவது சிறு குழந்தைகளுக்கு ஏஐ பற்றி மேலோட்டமாகச் சொல்லிக் கொடுக்கப்படும். அது மக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பது வைவரங்களை எடுத்துரைக்கும். அடுத்த கட்டமாக மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு ஏஐ தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து கற்பிக்கப்படும். மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி என்ன மாதிரியான புதுமைகளைச் செய்யலாம் என்று பாடம் நடத்தப்படும்.
அடுத்த 20 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு சீனா கல்வி முறையில் இந்த மாற்றங்களைச் செய்துள்ளது.சீனா ஏஐ துறையில் மிகப்பெரிய சக்தியாக மாற விரும்புகிறது. இதனால்தான் நாட்டில் படிக்கும் குழந்தைகளை செயற்கை நுண்ணறிவில் திறமையானவர்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் புதுமை, தொழில்நுட்பத்தில் வலிமையானவர்களாக மாற முடியும். சீனாவின் இந்த முயற்சியின் தாக்கம் அடுத்த 20 ஆண்டுகளில் தெரியும். இதுவே சீனாவின் திட்டமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் சீனா தொடக்கப் பள்ளிகளில் இருந்தே ஏஐ தொழில் நுட்ப பாடங்களை கட்டாயமாக்கியுள்ளது. அவர்கள், எதிர்காலம் ஏஐக்கு சொந்தமானது என்று நம்புகிறார்கள்.
சீன கல்வி அமைச்சர் ஹுவா, ஜின்பிங்கை மேற்கோள் காட்டி சீன ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ''இந்த ஆண்டு சீனா செயற்கை நுண்ணறிவு குறித்த புதிய வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளது. இது கல்வித் துறையில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும். ஏஐ கல்வியின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான திட்டங்கள், வழிகாட்டுதல்களை உள்ளடக்கும்.
கல்வியில் செயற்கை நுண்ணறிவைச் சேர்க்கும் முயற்சி முதன்முதலில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. அங்கு இதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதேபோல் இத்தாலியிலும் சிறு குழந்தைகளுக்கு அவர்களின் டிஜிட்டல் திறன்களை வளர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் இந்தியை வளர்க்கவும், தமிழை வைத்து உணர்வுப்பூர்வமான அரசியலைத் தூண்டும் வகையில் மட்டுமே கல்விக் கொள்கையை உருவாக்கி, எதிர்கால மாணவ சமுதாயத்தை குழப்பத்தில் ஆழ்த்தி வரும் திட்டங்களை மட்டுமே உருவாக்கி வருகின்றனர். மொழியை வைத்து அரசியல் செய்யும் மாநிலங்களும், மொழியை புகுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கும் மத்திய அரசும் சீனாவின் புதிய கல்விக் கொள்கையை முன்னெடுத்தால் உலக அளவில் சாதிக்கலாம். எதிர்கால சந்ததிகளுக்கு ஆக்கப்பூர்வமான கல்விக் கொள்கையை ஆதரிக்கும் சீனாவை பாராட்டலாம். இந்தியாவியாவில் பின்னேற்ற மொழிக்கொள்கை.. சீனாவில் முன்னேற்ற கல்வி வழிக்கொள்கை..!
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு வழங்கிய ரூ.1,74,29,85,00,000 கடன்… இரக்கம் காட்டிய சீனா..!